Pages

கிரகங்களின் பார்வை என்றால் என்ன

Tuesday, 18 June 2019

சென்ற பாடத்தில் ஆடி மாதம்-30-ம் தேதிக்கு கிரக நிலையைப் போட்டோம். சந்திரனைத் தவிர மீதி எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டோம். இப்போது நாம் சந்திரனைப் போடப் போகிறோம். நாம் ஆடி 30-ம் தேதிக்கு என்று கிரகங்களைப் போட்டோமே தவிர எந்த நேரத்திற்கு என்று போடவில்லை. இப்போது மாலை 5.00 மணிக்கு க பிரகங்களைப் போடுவோம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆடி 30-ம் தேதி அன்று "நக்ஷ" என்ற கட்டத்திற்கு எதிராக "ரோ 2311" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது சூரிய உதயத்திலிருந்து 23 நாழிகை 11 வினாழிகை ரோகி ணி நஷ்ஷத்திரம் இருக்கிறது. அதாவது பகல் 03-18 முடிய ரோகிணி நஷ்ஷத்திரம் இருக்கிறது. ஆங்கில மணியைப் பக்கத்திலுள்ள கட்டத்தில் கொடுத்து இருக்க பிறார்கள். சந்திரன் 23நாழிகை 11 வினாழிகை முடிய மிருக சீரிஷம் நக்ஷக்ஷத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் எனப் பொருள். அதாவது பகல் 03-மணி 18 நிமிஷங்கள் வரை சந்திரன் ரோகிணியில் இருக்கிறார். அதற்குப்பின் அவர் எங்கு செல்வார்? அடுத்த நக்ஷக்ஷத்திரத்த பிற்குத்தான். அடுத்த நக்ஷக்ஷத்திரம் என்ன? மிருகசீரிஷம் தான். மறுநாள் பகல்20-நாழிகை 45 விநாழிகை முடிய (அதாவது பகல் 03மனி 18நிம் ஷங்கள் வரை) சந்திரன் மிருகசீரிஷத்தில் இருப்பார். ஆடி 31-ம் தேத பியைப் பார்த்தால் இது தெரிய வரும்.

நாம் எடுத்துக் கொண்ட நேரமான மாலை 5.00மணிக்கு சந்திரன் ம பிருகசீரிஷத்தில் இருக்கிறார் அல்லவா. இப்போது ஒரு சிறு குழப்பம். ம பிருகசீரிஷம் 1,2 பாதங்கள் ரிஷபத்திலும், 3,4 பாதங்கள் மிதுனத்திலும் இருக்கிறது அல்லவா? சந்திரனை ரிஷபத்தில் போடுவதா அல்லது ம துனத்தில் போடுவதா? இப்போது சந்திரன் எந்தப்பாதத்தில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்போம். கண்டுபிடித்தால் நமக்குச் சந்திரனை எங்கு போடுவது என்பது விளங்கும்.

ஒரு நாளைக்கு மொதம் 60 நாழிகை எனக் கூறி இருந்தோம். சந்திரன் அன்று 23 நாழி கை 11 வினாழிகை ரோகிணியில் சஞ்சாரம் செய்து வ பிட்டார் இல்லையா? மீதிப் பொழுதை மிருகசீரிஷத்தில் அவர் சஞ்சாரம் செய்கிறார். ஆடி 30-ம் தேதிக்கு மொத்த நாழிகை 60.00 நாழிகை ரோகிணியில் சஞ்சாரம் செய்தது 23.11 நாழிகை சந்திரன் மிருகசீரிஷத்தில் 30-ம் தேதி மட்டும் சஞ்சாரம் செய்யவ பில்லை. 31-ம் தேதியும் 20 நாழிகை 45வினாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் இதுதெரிய வரும். மிருகசீரி ஷத்தில் மொத்தம் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார்? இரண்டையும் கூட்டுங்கள். 36.49 + 20.45 =57.34 நாழிகை.இந்த மொத்த நாழிகைக்குப் பெயர் ஆத்தியந்த பரம் நாழிகை எனப் பெயர். இப்போது ஆத்தியந்த பரமநாழிகை என்றால் என்ன? எனத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? சந்திரன் ஒரு நஷ்ஷத்திரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமே ஆத்தியந்த பரம் நாழிகை எனப் படும்.

நாம் எடுத்துக்கொண்ட நேரம் மாலை 5.00 மணி. அன்றைய சூரிய உதயத்தைக் கண்டு பிடுயுங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? பஞ்சாங்கத்தின் கீழ்ப் பகுதியைப் பாருங் கள். ஆடி 30-க்கு, அதாவது ஆகஸ்டு 14-ம் தேதிக்கு "சூரிய உதய காலை" என்ற கட்டத்தின் கீழ் போட்டுள்ளார்கள் பாருங்கள். காலை 6.02 எனப் போட்டுள்ளார்கள். காலை 6.02 முதல் மாலை 5.00மணி முடிய அதாவது 10 மணி 58 நிமிஷத்தை நாழிகை ஆக்குங்கள். 27-நாழிகை 25 வினாழிகை வரும். அதாவது குழந்தை பிறந்து சூரியோ தயத்திலிருந்து 27 நாழிகை 25 வ பினாழிகை ஆகிருக்கிறது. சூரியோதயத்திலிருந்து 23நாழிகை 13 வ னாழிகை முடிய ரோகிணி இருக்கிறது. மீதி (27.25-23.13= 04.12) நாழிகை மிருகசீரிஷத்தில் சென்று இருக்கிறது.

மிருகசீரிஷத்தின் ஆத்தியந்த பரமநாழிகை =57.34 அதாவது மிருகசீரிஷத்தின் 4- பாதங்களுக்கு =57.34 ஒரு பாதத்திற்கு =57.34 / 4 =14.24 நாழிகை சந்திரன் 14.24 நாழிகை வரையில் முதல் பாதத்தில் இருக்கிறார். நம்முடைய மானசீகக் குழந்தைக்கு மிருகசீரிஷத்தில் 4 நாழிகை 12 வ பினாழிகை சென்று இருக்கிறது. ஆகவே சந்திரன் முதல் பாதத்தில் தான் இருக்கிறார். ஆக சந்திரனை ரிஷபத்தில் போடுங்கள். என்ன 9 க பிரகங்களையும் போட்டு விட்டீர்களா? இப்போது திருகணித ரீதியாக ஜாதகத் தைப் போட்டோம். வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துப் போடுவோமா?

நாம் கையாண்ட திருகணிதப் பஞ்சாங்கம் காஞ்சீபுரத்தை வைத்துக் கண பிக்கப் படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் தஞ்சாவூரை வைத்துக் கணிக்கப் படுகிறது. அதில் சூரியோதயம் காலை 6.06 எனப் போட்டு இருக்க பிறார்கள். அதாவது தஞ்சாவூரில் சூரியோதயம் காலை 6.06. நாம் சிறார்கள். அதாவது தஞ்சாவூரில் சூரியோதயம் காலை 6.06. நாம் எடுத்துக் கொண்ட மானசீகக் குழந்தை சென்னையில் பிறந்தது எனக் கொள்வோம். திருகணிதத்தில் காஞ்சீபுரத்தில் சூரியோதயம் காலை 06.02 எனப் போட்டுள்ளதால் நாம் அந்த சூரியோதயத்தையே எடுத்துக் கொள்வோம். வாக்கி யப் பஞ்சாங்கத்தில் காலை 12நாழிகை 40 வினாழிகை வரை தான் மிருகசீரிஷம் எனப் போட்டு இருக்க பிறார்கள். அதற்குப்பின் திருவாதிரை நக்ஷக்ஷத்திரம் தான் வருகிறது. த பிருவாதரையில் எந்தப் பாதம் வருகிறது எனப் பாருங்கள். திருவாதரைய பின் ஆத்தியந்த பரம் நாழிகையைக் கண்டு பிடியுங்கள். பின்பு குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்து இருக்கிறது எனக் கண்டு பிடியுங்கள். த பிருவாதரை 2-ம் பாதத்தில் பிறந்து இருக்கிறது. சந்திரனை மிதுனத்தில் போடுங்கள். இரண்டு பஞ்சாங்கத்திலும் ஜாதகம் கணித்தபின் எப்படி இருக்கிறது எனப்பாருங்கள். 





வித்தியாசம் தெரிகிறது அல்லவா? நஷ்ஷத்திரமே மாறி இருக்கிறது அல்லவா? அதற்குத்தான் நாம் திருகணிதத்தையே எல்லோரும் கையாள வேண்டும் எனக் கூறி வருகிறோம். கிரகங்கள் பார்க்கின்றன என ஜோதிடத்தில் கூறுகிறார்கள் அல்லவா? பார்வை என்றால் என்ன? அதை இப்போது பார்ப்போம். எல்லாக் க பிரகங்களும் தான் இருக்கும் வீட்டில் இருந்து 7-ம் வீட்டைப் பார்க்கும். உதாரணமாக சந்திரன் ரிஷபத்தில் இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்ப்பார். ரிஷபத்திலிருந்து எண்ணுங்கள். ரிஷபம் 1,ம பிதுனம் 2, கடகம் 3,சிம்மம் 4, கன்னி 5, துலாம் 6, விருச்சிகம் 7. ஒருகிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டையும் சேர்த்து எண்ண வேண்டும். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டி லிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள்.ஆனால் குரு,சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு. செவ்வாய்:- அவர் தான் இருக்க்கும் இடத்திலிருந்து 4,7,8-ம் வ வீடுகளைப் பார்ப்பார். நம் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். அவர் 4-ம் பார்வையாக கும்பத்தையும், 7-ம் பார்வையாக ரிஷபத்தையும், 8ம் பார்வையாக மிதுனத்தையும் பார்ப்பார். அவர் ரிஷபத் தைப் பார்க்கும் போது அதில் உள்ள சந்திரன், சனி ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். அதே போல் மிதுனத்தைப் பார்க்கும் போது அதில் உள்ள குரு, ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். பார்வையினால் என்ன பலன் என்பதைப் பின்னால் பார்ப்போம். 

குரு:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 5-ம் வீடு, 7-ம் வீடு, 9-ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பார். குரு மேற்கண்ட ஜாதகத்தில் மிதுனத்த பில் இருக்கிறார். அவர் 5-ம் பார்வை யாக துலாத்தையும், 7-ம் பார்வையாக தனுசையும், 9-ம் பார்வையக கும்பத்தையும் பார்ப் பார். அந்த வீடுகளையல்லாது அந்த வீட்டில் உள்ள கிரகங்களையும் பார்ப்பார்.

சனி:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம் வீடான கடகத்தையும், 7-ம் வீடான விருச்சிகத்தையும் 10-ம் வீடான கும்பத்தையும் பார்ப்பார். அந்த வீட்டிலுள்ள கிரகங்களையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களுக்கெல்லாம் 7-ம் பார்வை ஒன்று தான். பார்வை என்பது இரண்டு கிரகங்களுக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கும், ஒரு வ ஊட்டிற்கும் உள்ள தூரம் தான். இந்த தூரத்தைத்தான் நாம் பார்வை என்க றோம். ஜாதகத்தில் நாம் ஒன்பது கிரகங்களைப் போட்டு விட்ட்டோம். இனி லக்கினமும், ஜனனகால இருப்பு தெசையையும் கணித்தோமேயானால் ஜாதகம் முழுமை ஆகிவிடும். இப்போது லக்கினம் என்றால் என்ன எனப் பார்ப்போம்?

சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத்தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்னம் எனப்படும். என்ன புரிகிறதுவும் போல் இருக்கிறது; அதே சமயம் புர பியாதது போலும் இருக்கிறது. இல்லையா. இன்னும் வ பிளக்கமாகச் சொல்லுகின்றோம். பூமியை மேலிருந்து கீழாகப் 12 பகுத பியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 12-பகுதிக்கும் மேஷத்திலிருந்து, மீனம் முடிய 12 ராசிகளின் பெயர்களைக் கொடுங்கள். அதாவது பூமியைப் 12 ராசிகளாகப் பிரித்து விட்ட்டோம்.

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்த பில் ரிஷபத்தில் உதயமாவர். 

இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார். சூரியன் சித்தரையில் மேஷத்தில் உதயமாவதால் அதற்கு மேஷமாதம் என்று பெயர். வைகாசியில் ரிஷபத்தில் உதயமாவதால் அதற்கு ரிஷப் மாதம், என்று பெயர். இவ்வாறே ம பிதுனமாதம், கடக மாதம், சிம்ம மாதம், கன்னியா மாதம், துலா மாதம், விருச்சிக மாதம், தனுர் மாதம், மகர மாதம், கும்ப மாதம், மீன மாதம் என்று ஒவ்வொரு மதமும் அழைக்கப்படும்.



ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெ றுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார். சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1,2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் இருக்கும்போது மிகுந்த பலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.அஸ்வனி முதல் ரேவதி முடிய உள்ள 27 நக்ஷக்ஷத்த பிரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அக்னிக்கும் பிறந்த பெண்களாம். தட்சன் இந்தப் பெண்களையெல்லாம் சந்த பிரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.சந்திரன் இந்த 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தி வந்தான். மற்ற 26 பேரையும் அவன் ந பினைக்கவே இல்லை. இதனால் விரக்தியுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். தட்சன் மிக வருந்த 1 மருமகன் சந்திரனிடம் "எல்லோரிடமும் சமமாக | அன்பாய் இருக்குமாறு" கூறினான். ஆனால் சந்திரனோ அவர் பேச்சைக் கேட்க்காமல் பழையபடி ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் கலைகள் நாளா வண்ணமும் குன்றட்டும் என சாபமிட்டார். சந்திரனின் ஒளி ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கியது. இதனால் வருத்தமுற்ற சந்திரன் சிவபெறுமானை நோக்கித் தவம் புரிந்தான். தனக்கு ம மீண்டும் பழைய ஒளி கிடைக்க வேண்டும் என வேண் டிக்கொண்டான். சிவனும் மனமிறங்கி "குன்றத்தொடங்கிய ஒளி மீண்டும் சிறிது சிறிதாக வளர" வரம் கொடுத்தார். அதனால் தான் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்து பின் 15 நாட்களில் வளர்கிறார். இது தான் தேய் பிறை, வளர் ப பிறை தோன்றிய புராணக்கதை. சரி! நாம் இனி வ விஞ்ஞானத்திற்கு வருவோம்.

சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். பெளர்ணம் பியன்று சூரியனின் ஒளி சந்திரன் மேல் பட்டு ப பிரகாசமாய்க் காட்சி அளிக்கிறார். முழு நிலவாய்க் காட்சி அளிக்கிறார். சந்திரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்ற பிக் கொள்ள 27 பூமியின் நாட்கள் ஆகின்றன. அதாவது சந்திரன் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்குள் பூமி 27 முறை சுற்றி விடுகிறது. சந்திரன் மெதுவாகச் சுற்றுவதால் தினமும் சிறிதுசிறிதாய்க் குறைகிறார். நமது கண்களுக்கு சிறிது, சிறிதாகக் குறைந்து காணப் படுகிறார். இதுதான் ப பிறைகள் தோன்றக் காரணம். அம்மாவாசையன்று சந்திரன் பாதிச் சுற்றுத்தான் சுற்றி இருப்பார். அப்போது அவர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மீதிச் சுற்றைச் சுற்ற ஆரம்பிக்கும் போது சிறிது, சிறிதாக வளர ஆரம்பிக்க பிறார். அதைத் தான் நாம் வளர் பிறை என்கிறோம். ஒரு சுற்று முடிந்தவுடன் அவர் முழுநிலவாய்க் காட்சி அளிக்க பிறார். அதைத்தான் நாம் பெளர்ணமி என்கிறோம். நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். மறு பக்கக்கைப் பார்க்கவே முடியாதா? மறு பக்கத்தைப் பார்க்கவே முடியாதா? முடியும். அம்மாவாசையன்று அது மறு பக்கத்தைக் காட்டுகிறது. நமக்குத்தான் அது இருட்டாக இருப்பதால் மறுபக்கம் தெரிவதில்லை. நாம் எப்போதும் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். சரி! இனிமேல் நாம் பாடத்திற்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஆச்சார பியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேத பிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.



ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

12 - மிதுனம் சுக்கிரன் 
13 - கடகம் புதன் 
28 - சிம்மம் புதன்

அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரி ஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்ச பிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.

 

Most Reading

Archives

Total Pageviews