நல்ல இல்லறத்தை விட துறவறம் எந்த விதத்திலும் உயர்ந்தது கிடையாது.கிருஷ்ணனும்,இராமனும்,சிவனும்,முகமது நபியும், குடும்பமில்லா துறவிகள் அல்ல!அவர்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் பகவத் கீதையையும்,குரானையும்,கொடுத்தார்கள்.அனுபவ பாடத்தை அனுபவமுள்ள இல்லற ஞானியிடம் மட்டுமே நீங்கள் நிச்சயமாக பெற முடியும்.இல்லற ஞானிகள் மக்களோடு மக்களாக சாமியாருக்குரிய வெளியடையாளமின்றி சாதாரணமாக இருப்பதால் நீங்கள் அவர்களை மதிப்பது இல்லை.அக மாற்றமே ஆன்மீகம் என்ற உண்மையை நீங்கள் உணராததால், புத்தக ஞானம்,கர்வம்,மழித்தலும்,நீட்டலும் உள்ள மடம்,ஆசிரமங்களில் உள்ள சில தவறான துறவிகளிடம் பணம்,பொருள்,மனைவி,கணவன்,பிள்ளைகள் என எல்லவற்றையும் இழந்து ஏமாற தயாரக உள்ளீர்கள்.முழுமையான துறவுநிலை கோடியில் ஒருவருக்கே சித்திக்கும்.இல்லறமே நல்லறமென்பதை சித்தர்களும் வாழ்ந்து வழிகாட்டியுள்ளார்கள்.பாரத தாயின் புதல்வர்களே!நீங்களே ரிஷிகள்(இல்லற ஞானிகள்) தான்!அதை உணராமல் இருப்பதே இன்றைய தலைமுறையின் பிரச்சினை,உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இறைவனை அழையுங்கள்!நீங்களும் ரிஷிகள் தான் என்பதை உணர்விர்கள் பேரன்பாளர்களே!குறிப்பு;மனதை தவிர எதையும் துறக்க வேண்டியது இல்லை