Pages

திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் ஆலயம்

Sunday, 16 June 2019


சிவாயநம
நமசிவாய

திருவாரூர் மாவட்டம்  கும்பகோணத்தில் இருந்து  திருவாரூர் செல்லும் வழியில்  15 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 93 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 156 வது தலமாகவும் விளங்கும்

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார். மானை தன் கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது.

கபில முனிவர் பூஜித்த தலம்.சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.

வெண்குஷ்டம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும், என்பதும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தித்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை என்று
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்


திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருத்தலையாலங்காடு
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் பாலாம்பிகை (திருமடந்தையம்மை)
அம்பாள் உடனுறை அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர்
(நடனேஸ்வரர்) சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.

 

Most Reading

Archives

Total Pageviews