Pages

சரணாகதி_என்றால்_என்ன ??

Wednesday, 5 June 2019

என்னை எனக்கு கொடுத்து !!
என்னை நானே விரும்பி எதில் தொலைத்தாலும் மீட்டு எடுத்து கொடுத்து !!
என்னை என்னுள்ளே நான் அறியாதே பராமரித்து !!
என்னை யாரிடம் எப்படி காட்டவேண்டுமோ காட்டி !!
யாரிடம் எதை எப்படி பேசவேண்டுமோ பேசவைத்து !!

இருக்க இடம் கொடுத்து !!
நடக்க வழிகொடுத்து !!
கடக்க காட்சி அமைத்து !!
அடைய இலக்கையும் அமைத்து !!
இலக்கையும் நாளும் மாற்றி ??
இலக்கு இதுமட்டும் அல்ல என்றும் உணர்வித்து !!
நாளும் என்னை என்வழி போலவே பயணிக்க வைத்து !!

சேர்ப்பன சேர்த்து !!
விலக்குபவன விலக்கி !!
கற்ப்பன கற்பித்து !!
மறப்பான மறக்கவைத்து !!
என்னை மீறி என்னை ??
காட்டி ? செயல்படவைத்து ? அனுபவபடவைத்து ? பக்குவும் அடையவைத்து ?? நாளும் மேருகுகேற்றி ?? என்னுள் ஒளியாய் !! என்னை ஒளிரவைத்துகொண்டு இருக்கும் !!

ஒன்றை கடந்து ??
என்னால் எதை செய்யமுடியும் !! என்று பெற்று, உணர்ந்து, அனுபவித்த மெய்யே இறைவன் !!

அப்படி எங்கும், எதிலும், என்னுளும் இருப்பவனோடு,
விரும்பியும் ? விரும்பாதும் ?? இணக்கமாக தானே இருக்கிறேன் என்று தெளிந்து !!

எல்லாம் இறைவனே, எதிலும் அவனே, இவனும் அவனாலேயே
என்று
உன்னை கடந்தவனை
உன்னுள்ளும் கலந்தவனை
உன்னை மீறி அனுபவிப்பது இருக்கே ..........

அதுவே சரணாகதி !!

ஏதோ எதும்தெரியாதவன் என்று தெரிவிப்பவன் திருவருளால்

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

 

Most Reading

Archives

Total Pageviews