Pages

திருக்குடவாயில் கோணேஸ்வரர் ஆலயம்.

Monday, 17 June 2019


சிவாயநம
நமசிவாய

திருவாரூர் மாவட்டம்  கும்பகோணத்தில் இருந்து  திருவாரூர் செல்லும் வழியில்  20 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 94 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 157 வது தலமாக விளங்கும்

பிரளயகாலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா, ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப்  சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது.  பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான்.

கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பியதாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்

63 நாயன்மார்களில் ஒருவராக உள்ள காச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றான இவ்வாலயத்தில்

அருணகிரிநாதர், சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருக்குடவாயில் (குடவாசல்)
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தவாறு  அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் பெரியநாயகி
அம்பாள் உடனுறை அருள்மிகு கோணேஸ்வரர்
சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.

 

Most Reading

Archives

Total Pageviews