தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 10 கி.மீ தூரத்தில் நாச்சியார்கோவில் அருகே உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,
காவிரி தென்கரை தலங்களில் 65 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 128 வது தலமாகவும் விளங்கும்
மகரிஷியான மேதாவிக்கு, ஒருசமயம் மகாலட்சுமியே தனது மகளாக பிறக்க வேண்டுமென ஆசை எழுந்தது. அதற்காக அவர் இத்தலத்திலுள்ள தீர்த்தக் கரையில், வஞ்சுள மரத்தின் அடியில் சிவனை வேண்டி தவமிருந்தார். மேதாவியின் பக்தியில் மகிழ்ந்த சிவன் திருமாலிடம், மகாலட்சுமியை மேதாவியின் மகளாக பிறக்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டார். திருமாலும் சம்மதித்தார். ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் மகாலட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்த மகரிஷி, திருமாலுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். மேதாவி மகரிஷிக்கு காட்சி தந்த சிவன், இத்தலத்தில் எழுந்தருளினார்.
கோரக்க சித்தர் வழிபாடு:
சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல்வியாதி உண்டானது. நோய் நீங்க அவர் இங்கு சுவாமியை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். கோரக்க சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர், "சித்தநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்
திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்
திருநறையூர் (சித்தீஸ்வரம்)
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்து அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் செந்தர்யநாயகி
அம்பாள் உடனுறை அருள்மிகு சித்தநாதேஸ்வரர் சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.
திருச்சிற்றம்பலம்.