Pages

திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம்

Friday, 21 June 2019


சிவாயநம
நமசிவாய

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 95 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 158 வது தலமாக விளங்கும்

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு  லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய  ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.  (ரிண- கடன், விமோசனம் - நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் - ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.

ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.

இவ்விறைவர், ரிண  விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும்.

கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி என்று கூறும்
தலமாக திகழும்


திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருச்சேறை
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக  அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் ஞானாம்பிகை
அம்பாள் உடனுறை அருள்மிகு சாரபரமேஸ்வரர் (செந்நெறியப்பர்)
சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.

 

Most Reading

Archives

Total Pageviews