Pages

நாயன்மாா்களின் இல்லத்தரசிகள்.

Wednesday, 24 February 2016


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴அப்பூதியடிகளின் மனைவியாா்.
                     ××××××
தான் பெற்ற பிள்ளை பாம்பு தீண்டி இறந்த போதும் துக்கத்தை மறைத்து திருநாவுக்கரசருக்கு அமுது படைக்க உதவி செய்து விருந்தோம்பல்
தா்மம் காத்து நின்றாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴அமா்நீதியாாின் மனைவியாா்.
                       ×××××
கோவணத்துக்கு நிறையாக கணவன் துலாத் தட்டில் ஏறிய போது தானும் உடன் ஏறி,
 மங்கையருக்கெல்லாம் வழிகாட்டினாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴அாிவாட்டாயாின் மனைவியாா்.
                    ×××××
சிவ நிவேதனத்திற்குாிய செந்நெல்லை கணவன் இறைவனுக்கு அா்ப்பணம் செய்திட உதவி செய்து இல்லறம் என்னும் நல்லறம் செய்தாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴இயற்பகையாாின் மனைவியாா்.
                            ×××××
தனது கணவன் தன்னைஅடியவருக்கு தானம் கொடுத்தவுடன் எதிா்ப்பு தொிவிக்காமல் கணவன் கட்டளையை நிறைவேற்றி பத்தினி தா்மம் காத்தாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴இளையான்குடி மாறனாாின் மனைவியாா்.
                      ×××××
விதை நெல்லையும், கீரையையும் சமைத்து அடியவா்க்கு விருந்து படைத்திட கணவருக்கு
 உறுதுணையாக இருந்தாா்.            

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴ஏயா்கோன் கலிக்காமாின் மனைவி, மாணக்கஞ்சாா் மகள்.
                   ××××
தன் கூந்தலை தந்தை அறுத்துக் கொடுத்த போது மகிழ்வுடன் நின்றாா். கணவாின் விருப்பப்படி கணவா் இறந்ததை மறைத்து சுந்தரரை உாிய முறையில் விருந்தோம்பல் செய்து வரவேற்று அடியவா் திருத்தொண்டில்
 சிறந்து நின்றாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴குங்கிலியக்கலயாின் மனைவியாா்.
                       ××××
கணவாின் பணிக்கு உதவியாக தன் திருமாங்கல்யத்தை. கழட்டிக்
 கொடுத்து கணவாின் பக்திக்கு
   துணை நின்றாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴கோட்செங்கட் சோழாின் தாயாா் கமலவதி.
                        ×××
நன்மக்கட் பேறுக்காக பிரசவ வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு நாழிகை நேரம் தலை கீழாகத் தொங்கி தன் மகனை பெற்றெடுத்து உயிா்த் தியாகம் செய்தாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴சிறுத்தொண்டாின் மனைவி திருவெண்காட்டு நங்கை.
                         ×××
பிள்ளைக்கறி சமைக்க தனது கணவனுக்கு உற்ற துணையாக இருந்தாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴சுந்தராின் மனைவி பரவை நாச்சியாா்.
                         ×××
சிவனடியாா்களுக்கு அமுது படைத்து சிவத்தொண்டுக்கு உறுதுணையாக இருந்தாா்.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔴திருநீலகண்ட யாழ்ப்பாணாின் மனைவி மதங்க சூளாமணி.
                         ××  
யாழ்ப்பாணாின் இசைத் தொண்டிற்கு துணை நின்றாா்.
==============================
🔴திருநீலநக்காின் னைவியாா்.
                              ××
லிங்கத் திருமேனி  மீது விழுந்த சிலந்தியை தாயன்புடன் ஊதி தூய்மைப் டுத்தினாா். அம்மையாா் ஊதிச் சுத்தப் படுத்தாத இடமெல்லாம் கொப்புளங்கள் காட்டியருளினாா் இறைவன்.
---------------------------------------------------------
🔴திருப்பனந்தாளில் தடாகை பிராட்டியாா்.
                       ××
அன்பு மலா் மாலையை இறைவன் தலை குனிந்து மாசற்ற அன்போடு பெற்றுக் கொண்டாா்.
           
         திருச்சிற்றம்பலம்

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!!

     ★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். ★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன். ★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள். ★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைலைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மறியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது. ★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார். ★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம். ★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம். ★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது. ★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்கலாம். ★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும். ★மழை சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நினைத்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும். நினைத்த உடனே மழையை வரவழைக்க முடியும். மேட்டூர் அணையை ஏழு முறை நிரம்பிய வைத்தவர். அவரை பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன். நன்றி.சித்தர்களின் குரல்

சித்தர் ராமதேவர் குருபூசை



ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ சித்திகள் வாய்க்கப் பெற்றார்.

வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயில ஆரம்பித்தார்.சஞ்சார சமாதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டு பல புண்ணிய தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

ஒரு சமயம் மெக்கா சென்றார். அங்குள்ளவர்கள் அவருக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டி அந்நாட்டு  வழக்கப்படி உபதேசம் செய்தார்கள். யாக்கோபுவெகு விரைவில் மெக்கா மக்களால் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.ஒருவர் பின் ஒருவராக சீடர் பலர் சேர்ந்தனர்.

பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு  அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி வைத்தார். ஒரு நாள் கற்பக மூலிகைகளின்  திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில் இருக்கப் போவதாகச் சீடர்களிடம் கூறினார். சமாதி மூடப்பட்டது.

ராமதேவன் கற்பக மூலிகைகளின் துணை கொண்டு  யார் கண்ணிலும் படாமல் அங்கிருந்து மறைந்தார். காடு மலை நதி என்று நாடு கடந்தும் சுற்றித் திரிந்தார். அந்தக் காலத்தில் காலாங்கி நாதர்  சமாதியைத் தரிசித்தார். உடனே  கைகளைக் கூப்பி வணங்கி அதன் பக்கத்திலேயே தியானம் செய்ய ஆரம்பித்தார்.

தியானம் சித்தியான நிலையில் காலாங்கி நாதர் ராமதேவருக்குத் தரிசனம் தந்து அனுபவரகசியங்களை உபதேசித்து மறைந்தார். ராமதேவருக்கு அநுபூதி நிலை  கை கூடியது. யாக்கோபு என்ற  பெயரில் மெக்காவில் எழுதிய பதினேழு நூல்களைத் தமிழில் பாடினார்.

சதுரகிரியில் சிலகாலம் தங்கியிருந்து தவமியற்றினார்.பத்து ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபு சொன்னது போலவே திரும்பி வந்தார். தன் உண்மைச் சீடன்சமாதியருகிலேயே  இருந்தது கண்டு  மனம்  நெகிழ்ந்தார். நான் மறுபடியும் சிறிது காலம் சமாதியிலிருக்க விரும்புகிறேன். இந்த முறை முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன். நான் சமாதிக்குச் சென்ற பிறகு என்னைத் தரிசிக்க வேண்டுமானால் சதுரகிரி மலைக்கு வர வேண்டும், என்று தெரிவித்து விட்டு  சமாதியானார்.

முப்பதாண்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதேவராக நடமாடிய யாக்கோபு சதுரகிரி வனத்தில் தங்கி வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார். ராமதேவர் மெக்காவிலிருந்து திரும்பி வந்து சதுர கிரிவனத்தில் தங்கியதால் அந்த வனத்திற்கு ராம தேவர் வனம் என்ற பெயரே வழங்குகிறது.அதன் பிறகு ராமதேவர் மறுபடியும் மெக்கா சென்று அனைவருக்கும் தரிசனம்  தந்ததாகக் கூறப்படுகிறது.

யாக்கோபின் அன்புக்குரிய சீடனை  அழைத்து அவனுக்கு காயகற்ப முறைகளைப் போதித்து  இனிதான் திரும்ப மாட்டேன். நிரந்தர சமாதியோகம் பூணப் போகிறேன்  என்று கூறி மெக்காவில் மவுன சமாதியானார். பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டு தமிழகம் வந்து அழகர் மலையில் சமாதியடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

மகாமக குளியல் இன்னும் முடியவில்லை !!!!!!!!!



ஆம் !!

நீங்கள்  ஜென்மம் / அனுஜென்மம் / திரிஜென்மம் நட்சத்திர நாட்களில் குளித்து உங்களுடைய அனைத்து பாவங்களை போக்கி கொள்ள பரிகாரமாக  மகாமக குளத்தில் குளித்தவர்கள் மீண்டும் ஒரு முறை இந்த குறிப்பிட்ட நாட்களில் குளித்தும், முன்னேரே குளிக்க தவறியவர்கள் இதை வாய்ப்பாக / அழைப்பாக கருதி வந்து குளித்தும் பயன் அடைய வேண்டுகிறோம் !!!!!!!!!
மகாமக மாசி மாத நீராடல்!
மாசி(கும்ப)மாதம் முழுவதும் புனித குளங்கள் ஆறுகள் சமுத்திரங்களில் நீராடி "நட்சத்திர ஹரதி பாப" என்ற வாக்யத்தின் படி உங்கள் பாவங்களை தொலையுங்கள்.


மகாமக குளத்திலும் மற்றைய.தீர்த்தங்களிலும் நீராட ஏற்ற நாட்கள்.

அசுவினி-மகம்-மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் கேது தசை நடப்பில் உள்ளவர்களும்
23/02/2016 மதியம் வரை&3/3/2016 & 12/03/2016
தேதிகளில் நீராடுங்கள்.
பரணி-பூரம்-பூராடம்
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள& சுக்கிரதிசை நடப்பில் உள்ளவர்கள் 23/02/2016 மதியத்துக்கு மேலும்&24/02/2016 & 04/03/2016 & 13/03/2016 தேதிகளில் நீராடுங்கள்.

கார்த்திகை -உத்திரம்-
உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்கள்
25/02/2016 மதியத்துக்கு மேல் &
26/02/2016 &
05/03/2016 தேதிகளில் நீராடுங்கள்.

ரோகிணி-அஸ்தம்-திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் சந்திர திசை நடப்பில் உள்ளவர்கள் 26/02/2016 & 06/03/2016 தேதிகளில் நீராடுங்கள்

மிருகசிரீடம்-சித்திரை-அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்ளும் செவ்வாய் திசை நடப்பில் உள்ளவர்கள் 27/02/2016 & 07/03/2016 தேதிகளில் நீராடுங்கள்

திருவாதிரை-சுவாதி-சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ராகு திசை நடப்பில் உள்ளவர்கள் 28/02/2016 & 08/03/2016 தேதிகளில் நீராடுங்கள்

புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் குரு திசை நடப்பில் உள்ளவர்கள் 29/02/2016 & 09/03/2016 தேதிகளில் நீராடுங்கள்.

பூசம்-அனுசம்-உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் சனி திசை நடப்பில் உள்ளவர்கள் 01/03/2016 & 10/03/2016 தேதிகளில் நீராடுங்கள்

ஆயில்யம்-கேட்டை-ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் புதன் திசை நடப்பில் உள்ளவர்கள் 02/03/2016 & 11/03/2016 தேதிகளில் நீராடுங்கள்.

தீர்த்தமாடுங்கள்! தீர்த்தமாடுங்கள்!
தீரா வினை தீருங்கள்!
ஓம் நமசிவய!

நன்றி திரு.ராஜசேகரன் அஸ்ட்ரோ (முகநூல்

இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா

★மனிதன் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு நோய் காரணமாக அமைகிறது. இந்த கருவியை பயன்படுத்தினால் மனிதனுக்கு நோய் வரவே வராது. ★இதை யோகம் செய்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சித்தர்கள் கண்டுபிடித்த easy technology. ★ இதை share செய்தால் கூச்சமாக நினைப்பார்கள் என்ற காரணத்தினால் தான் இதை யாருக்கும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சித்தர்கள் கண்டுபிடித்து பயன் இல்லாமல் போகுமா என்ன!!!!!! இந்த குறிப்பு பதினாறு கவனகர் ஐயா மூலமாக தான் எனக்கு தெரிய வந்தது. நான் 5 வருடமாக இந்த கருவியை பயன்படுத்துகிறே ன். கடந்த 5 வருடமாக எனக்கு நோய் வந்ததே இல்லை. நான் தினமும் காலையில் mega tv வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி 7; 30 am மணிக்கு பார்ப்பேன். அற்புதமான நிகழ்ச்சி. இந்த நிகழ்சி நான் பார்க்கவில்லை என்றால் நானும் சாதாரண மனிதனாகவே வாழ்ந்திருப்பேன். "உடம்பார் அழியில்..." உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. திருமந்திரம்-4: ◆◆◆இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா◆◆◆ ★★★★★★★★★★★★★★★★ இனிமா எடுக்கும் முறை: ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ★தலை உயரத்தில் (அதிகபட்ச உயரத்தில் ) எனிமா கேனை மாட்டி கொள்ளவும். ★நாசிலின் மீது எண்ணெய் தடவவும். சுத்தமான குடிநீரைத் தேவையான அளவு கேனில் ஊற்றவும் . ★குனிந்து நின்று கொண்டு ஆசன வாயில் நாசிலை செருகவும். உள்ளே சுமார் 2 அங்குலம் ஆழம் இருக்கும்படியாக இழுத்து வைக்கவும். ★அப்போது நீர் உள்ளே செல்லும். செல்லாவிட்டால் நாசிலை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்தால் நீர் உட் செல்லும். மூன்று நிமிடங்களில் நீர் சென்றுவிடும் . ★தேவையான நீர் உட் சென்றவுடன் நாசிலை எடுத்து விடலாம். நீரை உடனே கழித்து விட கூடாது. இதனால் பயன் குறைவு. ★சில நிமிடங்கள் நீரை உள்ளே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். முடியாவிட்டால் கழித்து விடலாம். ★எனிமா எடுத்து கொண்டவுடன் குத்துக்கால் வைத்து படுத்துக் கொண்டால் தான் நீரை வைத்திருக்க எளிதாய் இருக்கும். ★நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் சிரமம். தேவையான நேரம் வைத்திருந்து விட்டு நீரை கழித்து விடலாம். ★மோட்டார் சைக்கிள் , கார் போன்ற வாகனங்களில் புகையை வெளியேற்றும் குழாய் ( exhaust pipe ) அடைத்து கொண்டால் எஞ்சின் இயக்கம் நின்றுவிடும். ★அதேபோல் கழிவை வெளியேற்றும் மலக்குடலில் இருக்கும் ஜென்மாந்திர அடைப்பே நம்முடைய பல நோய்களுக்கு காரணம். ★நெற்றியில் வெள்ளை மலமும் அடிவயிற்றில் மஞ்சள் மலமும் சேரகூடாது என்று வள்ளலார் கூறியுள்ளார். மனிதனுக்கு பல நோய்கள் வருவதற்கு காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் தேக்கி வைப்பதே காரணம். எந்த பாம்பிற்காவது எனக்கு பல் வழி என்று சொல்லி கொண்டு டாக்டர் கிட்ட போயிருக்கா!!. அல்லது எந்த கிளி யாவது எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு கீச்சி கிச்சி னு கத்த முடியல னு சொல்லி இருக்குமா !!!. மனிதனுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு நோய்கள் வருகிறது ??. அதுவும் ஆறு அறிவு என்று நம்மை நாமே சொல்லி கொள்கிறோம். நன்றி சித்தர்களின் குரல் முக நூல்.

நல்ல இல்லறம்

நல்ல இல்லறத்தை விட துறவறம் எந்த விதத்திலும் உயர்ந்தது கிடையாது.கிருஷ்ணனும்,இராமனும்,சிவனும்,முகமது நபியும், குடும்பமில்லா துறவிகள் அல்ல!அவர்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் பகவத் கீதையையும்,குரானையும்,கொடுத்தார்கள்.அனுபவ பாடத்தை அனுபவமுள்ள இல்லற ஞானியிடம் மட்டுமே நீங்கள் நிச்சயமாக பெற முடியும்.இல்லற ஞானிகள் மக்களோடு மக்களாக சாமியாருக்குரிய வெளியடையாளமின்றி சாதாரணமாக இருப்பதால் நீங்கள் அவர்களை மதிப்பது இல்லை.அக மாற்றமே ஆன்மீகம் என்ற உண்மையை நீங்கள் உணராததால், புத்தக ஞானம்,கர்வம்,மழித்தலும்,நீட்டலும் உள்ள  மடம்,ஆசிரமங்களில் உள்ள சில தவறான துறவிகளிடம் பணம்,பொருள்,மனைவி,கணவன்,பிள்ளைகள் என எல்லவற்றையும் இழந்து ஏமாற தயாரக உள்ளீர்கள்.முழுமையான துறவுநிலை கோடியில் ஒருவருக்கே சித்திக்கும்.இல்லறமே நல்லறமென்பதை சித்தர்களும் வாழ்ந்து வழிகாட்டியுள்ளார்கள்.பாரத தாயின் புதல்வர்களே!நீங்களே ரிஷிகள்(இல்லற ஞானிகள்) தான்!அதை உணராமல் இருப்பதே இன்றைய தலைமுறையின் பிரச்சினை,உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இறைவனை அழையுங்கள்!நீங்களும் ரிஷிகள் தான் என்பதை உணர்விர்கள் பேரன்பாளர்களே!குறிப்பு;மனதை தவிர எதையும் துறக்க வேண்டியது இல்லை

சித்தர்களின் "ழ" என்கிற சாகாக்கலை

!!! ======================== சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல் பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே. பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில் இட்டார்களோ என்னமோ? சித்தர்களின் பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்துப் பாருங்கள் சாவே போ மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் புரிந்தால் சாவே போ என்றால் சாவு என்ற இறப்பு போய்விடும்.இவ்வளவு எளிமையாக இறப்பை போக வைக்க முடியுமா? அப்படியானால் ஏன் யாரும் இதற்கு முயற்சிக்கவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழும் இல்லயா? முயற்சிக்காமலா இத்தனை சித்தர்கள் நம் நாட்டில் தோன்றியுள்ளார்கள்! அவர்கள் காட்டிய வழிகளை ரகசியமாக வாய்மொழியாக பல தலை முறையாக காப்பாற்றி வருகிறார்கள். திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச் சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டிமறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி மதனகலி யாணதிரு வல்லி மாதுவரையெழுந்த பதினெட்டாங் கோட்டின்மேலு மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றிகரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே சாகாக்கால் செத்துப்போக வேண்டும்? வேகாக்கால் வெந்து போக வேண்டும்? போகாப்புனல் வற்றி போக வேண்டும்? (புனல் என்றால் தண்ணீர் என்று பொருள்) மேலே கண்ட இரண்டாவது படம் லிங்கோத்பவர் என்பது ஒவ்வொரு சிவன் கோவிலிலும் கருவறைக்குப் பின்னால் இருக்கும்.இது மிக ரகசியப் பொருள் விளக்கம் என்பதால் கருவறைக்குப் பின் வைக்கப்பட்டுள்ளது. அது சிவனின் திருமால் பன்றி வடிவமாக(வராக அவதாரம்)அடியையும் (கால்),பிரம்மா அன்னப் பட்சி வடிவில் முடியையும் (தலையையும்) தேடியதையும் விவரிக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. (அடி முடி தேடிய படலமாக புராணங்களில் வருணிக்கப்படுகிறது). அதில் ஜோதி வடிவமாகவும் பொருள் வடிவமாகவும் இறைவனான சிவன் (ஜீவன்) இருப்பதைக் காணலாம். கால் என்பதை காற்று என்றும் ;மூக்கில் மேலும் கீழும் வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ,சிந்தைதனில் ஒத்து ஆடாது,ஓடாது நின்று போய்விட்டால் மரணமிலாப் பெருவாழ்வு’ என்று பொருள் கூறுவார்கள். அதையே அவ்வையார் ‘வாசி வாசி என்று வாசித்த சிவம் இன்று சிவா சிவா என சிந்தைதனில் நின்று’ என்று பாடினார் . சரிதான்.ஆனால் ‘வாசிக்குதிரையேறி (மூச்சு) ஞான வேட்டையாட வேண்டுமே தவிர குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது’.அதாவது குதிரையின் கடிவாளத்தைப் பற்றி குதிரையோட்ட வேண்டுமேயல்லாது குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது. குதிரையின் கடிவாளம் எது ? ‘காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்திட்டால் கூற்றை உதைத்துக் குதித்தாட மாட்டேனோ? ‘ என்றொரு சித்தர் கூத்தாடுகின்றார். ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம். அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்பட ி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில் 360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது. 216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும். 18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 டை குறிக்கும்.இந்த 18 டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள். "ழ" என்கிற சாகாக்கலையை ============================ சித்தர்கள் காட்டு ம் சாகாக்கலை !!!? உலகில் வாழும் மனித இனமே ஆறு அறிவு கொண்டது. மனித இனம் மட்டுமே இயற்கையை வென்று வாழ தன உயர்ந்த அறிவுத் திறனைப் பயன் படுத்தி வருவதை அறிவோம். பிறப்பு இறப்பு பற்றிய சிந்தனையைச் சீர் தூக்கி சிந்தித்து வாழும் வகையை அறிய முயற்ச்சித்தான் . மனிதன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்புவது இயற்கைதானே . நீண்ட நாள் உயிர் வாழ பல மூலிகைகளை க் கண்டுபிடித்து மருந்துகளை செய்த சித்தர்கள் குறிப்பாக சில பாடல்களில் எழதிவைத்து சென்றுள்ளார்கள். திருவள்ளுவர் ,திருக்குறளில் நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் (திருக்குறள் -948) நோய் எனபது என்ன என்று அறிந்து நோயின் காரணத்தை ஆராய்ந்து அந்நோயை நீக்கும் வழி கண்டுபிடித்து அதற்குரிய மருந்து கொடுத்து நோயை நீக்கும் படியான செயலை செய்யவேண்டும் ,என்று விளக்குகிறது . திருமூலரின் திருமந்திரத்தில் நோய் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவையைக் கூறுதலைக் காணமுடிகிறது . உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே ! உடம்பு அழிந்தால் உயிரும் அழியும் ,உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது , ஆகவே உடம்பை வளர்க்கும் வழி அறிந்து கொண்டு உடம்பைப் பேணி வளர்த்தேன் அதனால் உயிரையும் வளர்த்துக்கொண்டேன்! என்று திருமூலர் கூறியுள்ளார் . உணவுக்கட்டுப்பாடு ,தியானம் ,ஒழுக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தால் நீண்ட ஆயுள் வாழ முடியும் என்பதை நம் சித்தர் பலர் வாழ்ந்து காட்டியுள்ளார்கள் . புருவ நடுவில் நாடு நாடியாகிய சுழுமுனையில் சூரிய கலையும், சந்திரகலையும் ஒடுங்கும்போது சுவாசம் மிகவும் குறைந்து காணப்படும் சுவாசம் குறைந்து,குறைந்து இயக்கம் இல்லாமல் மனமும் ஒடுங்கும் அப்போது புருவ மையத்தியானம்தொடர்ந்து நடைபெற்றால்மரணமில்லாப் பெருவாழ்வு வாழ இயலும் என்பதை நினைவூட்டுவதர்க ்காகவே நெற்றிநடுவில்திலகமிடுதல் ,திருநீறு அணிதல் ,திருமண்இடுதல் போன்ற மரபுகள் தோன்றின . தமிழ் மொழியை பேசுவதாலும் ஆயுள் நீடிக்கும் திருமூலரின் திருமந்திரத்தில் "ழ" என்கிற எழுத்தை உச்சரிக்கும் போது நாவின் நுனி வளைந்து மேல் நோக்கி அங்குள்ள மேலண்ணத்தை தொடுகிறது தமிழ் எழுத்தான "ழ்"லை உச்சரிக்கும் போதே ஆயுளை நீடிக்கும் நுணுக்கமான யோகா முறைதிருமந்திரத்தில் காணமுடிகிறது . நாவின் நுனியை நடுவே சிவிறிடில் சீவனுமஅங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சதாகொடி ஊனே "ழ்"கரத்தின் உச்சரிப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு . தமிழ் என்ற சொல்லிலேயே சாகாக்கலை யின் முத்திரையை காணமுடிகிறது . சாகாக்கலையை பயில அடிப்படையாக இருப்பது சித்தர்களின் பாடல்கள் மேலும் திருக்குறளில் கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப் பட்டவர்க்கு இதில் தவத்தினால் பெற்ற ஆற்றல் சக்தியினால் மரணம் விளைவிக்கக் கூடிய கூற்றுவனையும் தாண்டி நீண்ட நாள் உயிர் வாழ்தல் கூடும் என்று கூறியுள்ளதை நினைவுகொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழமுற்படுவோம் . வாழ்க சித்தர் வழி , வாழ்வோம் சித்தர் நெறி !!! நன்றி சித்தர்களின் குரல் முக நூல். 🙏🙏🙏

புராணங்களை குழப்பிக் கொள்ள வேண்டாம்

புராணங்களை குழப்பிக் கொள்ள வேண்டாம். அதில் நிறைய மறைபொருள்கள் உள்ளன. நிச்சயம் அவை இக்காலத்தில் உங்களுக்கு புரியாது. நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை பற்றி மட்டுமே எண்ணியதால்தான் வான சாஸ்திரம் ஜோதிடம் சித்த மருத்துவம் போன்ற கலைகளை கற்க முடிந்தது. மாறாக நம்மை போல் அவர்களும் முன்னே நடந்த புராணங்களை மட்டுமே ஆராய்ந்து கொண்டு இருந்தால் எதையும் சாதித!து இருக்க முடியாது. தமிழன் அதிகம் முன்னேர முடியாத்தற்கு இதுவே காரணம். தெற்கு தெருவில் திருடனை பார்த்து நாய் குரைக்கும். இதை கேட்ட வடக்கு தெரு நாய் தானும் திருடனை பார்த்தது போல் பெரிதாய் காட்டிக்கொண்டு குரைக்கும். இதனை அடுத்து ஊர் முழுவதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்கும். இக்காலத்தில் அற்ப அளவு மனிதர்களே கடவுளை உணர்ந்தாலும் மற்றவர்கள் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். புராணங்கள் உண்மையாக இருந்தாலும் அதை எல்லாம் புரந்தள்ளிவிட்டு தன் அறிவை மட்டும் பயன்படுத்தி தன்னை அறிய முற்படுங்கள் உலகின் முதல் சித்தனோ விஞ்ஞானியோ எவனையும் பின்பற்றவில்லை. யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள். அதற்கான விடை உங்களுள்தான் இருக்கிறது. தேட முயலுங்கள் நிச்சயம் கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தி நீங்கள்தான். அதை உணர்ந்து வாழ்க்கையில் எல்லா விதத்திலும் மேன்மை அடைய வாழ்த்துகிறேன். "ஓர் ஒப்புயர்வற்ற சக்தி ,ஒரு செங்கோலோச்சம் ஆற்றல் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பரவி ஆட்சி செலுத்தி வருகிறது நீங்கள் இந்த சக்தியின் ஓர் அங்கம் " நீங்கள் எதுவாக இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எவற்றையெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பி கனவுகள் கண்டு கொண்டிருகிரிர்க ளோ அந்த கனவு வாழ்க்கை நீங்கள் நினைத்திருந்ததை விடவும் வெகு அருகிலேயே எப்போதும் இருந்து வந்துள்ளது ஏனெனில் நீங்கள் விரும்பும் அனைத்திற்குமான சக்தி உங்களுக்குல்லேதான் இருக்கிறது


நன்றி சித்தர்கள் தளம்

மகாமகம் என்றால் என்ன?

சிவமயம் சிவாயநம

மகாமகம் என்றால் என்ன?  அதன் வரலாறு மற்றும் அதன் சிறப்பைப் பற்றிப் பார்ப்போம்

மாசி மாதம் வியாழன் கோள் சிம்மராசியில் இருக்கும் பொழுது, மகம் நட்சத்திரமும்,
பூராடன நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம் மகாமகம்
ஆகும். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.

மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். பொதுவாக பாரதத்தில் இந்துக்களின் புனித நீராடல் என்பது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும்.

கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும்.

மகாமகம் புராணக் கதை

இந்துக்களால்
புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை,யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி,
சிந்து, கோதாவரி,
சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின.

இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அவர் கும்பகோணத்திலுள்ள மகாமக குளம் என்று அழைக்கப்பெறும் தீர்த்தத்தில் நீராடினால் நதிகளின் பாவங்கள் தீருமென்றார்.

மகாமகம் தொடர்புடைய சைவக் கோயில்கள்

சிவன் கைலாசத்தில் இருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.
இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும்
அமிர்தகலசநாதர் கோயில்
கும்பகோணம் நகரில் அண்மையில் உள்ளன. மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்

அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் -கும்பேஸ்வரர் கோயில்

வில்வம் விழுந்த இடம் -நாகேஸ்வரர் கோயில்

உறி (சிக்கேசம்) விழுந்த இடம் -சோமேஸ்வரர் கோயில்

பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்

தேங்காய் (நாரிக்கேளம்) விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்

சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்

புஷ்பங்கள் விழுந்த இடம் -கம்பட்ட விஸ்வநாதர் கோயில்

மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்

அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்

சந்தனம் விழுந்த இடம் -காளஹஸ்தீஸ்வரர் கோயில்

அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்

மகாமகம் தொடர்புடைய வைணவக் கோயில்கள்

மகாமகத்தின்போது கீழ்க்கண்ட வைணவக் கோயில்களின் சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.

சார்ங்கபாணி கோயில்

சக்கரபாணி கோயில்

இராமஸ்வாமி கோயில்

ராஜகோபாலஸ்வாமி கோயில்

வராகப்பெருமாள் கோயில்
இவையனைத்தும் கும்பகோணத்திலேயே உள்ளன

மகாமகப் புண்ணிய காலம்

தேவ குருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும்.

குரு பகவான் கும்ப ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.

பிரம்மதேவர் கும்பேசரைப் பூசிப்பதற்குத் தகுந்த காலம் மாசித்திங்களே என மனத்துள் கொண்டு, சீலம் நிறைந்த அந்த மாதத்துப் பூர்வ பட்சத்திலே வரும் அசுவதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி, பூசையைத் தொடங்கி, மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாள் விழாவைச் சிறப்பாகச் செய்து, பத்தாவது என்று சொல்லப்படுகின்ற திருநாளிலே, மக நாளிலே, அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்படுகிறது.

இதுவரை மகாமகம் 1518, 1529, 1541, 1553, 1565, 1577,
1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743, 1755,
1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடை
பெற்றுள்ளதற்கு கல்வெட்டுகள் மற்றும் இலக்கிய சான்றுகள் உள்ளன

15ஆம் நூற்றாண்டு மகாமகம்

திருச்சிராப்பள்ளி திருவானைக்கா கோவிலில் உள்ள விஜயநகரப் பேரரசின் குறுநில மன்னான தெலுங்குச் சோழன் வாலக காமயர் அக்கல ராசருக்குரிய கல்வெட்டில் திருவானைக்கா கோவிலிலிருக்கும் அகிலாண்ட நாயகியருக்குத் தினமும் அமுது படைக்க வெண்கோ கொண்கொடி என்னும் கிராமத்தில் ஒரு வேலி நிலம் தானமாக தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1482 மாசி மாதம் ஒன்பதாம் தியதி ஞயிற்றுக்கிழமை. அன்று மகாமகப் புண்ய காலமாகும்.

16ஆம் நூற்றாண்டு மகாமகம்

கிருஷ்ண தேவராயர்
கொண்டாடிய மகாமகம் தொடர்பாக இரு வெவ்வேறு நாள்கள் குறிப்பிடப் படுகின்றன.

கி.பி.1517 தை மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயநகரமன்னர் கிருஷ்ண தேவராயர் (கி.பி.1509-1929) திருப்பதிக்குச் சென்று திருவேங்கடநாதனைத் தரிசித்தார். பிறகு கும்பகோணத்திற்குச் சென்று மாசி மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாமகப் புண்ய காலத்தில் மகாமகக் குளத்தில் நீராடினார்.

கி.பி.1518ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி புதன்கிழமை ஒரு மகாமகம் கும்பகோணத்தில் நடந்ததாகவும், அன்று கிருஷ்ணதேவராயர் மகாமகக்குளத்தில் நீராடி பொன்னும் பொருளும் வாரி வழங்கியதாகவும் கல்வெட்டுக்களின் மூலமாகத் தெரியவருகிறது.

17ஆம் நூற்றாண்டு மகாமகம்

1624ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாமகம் வந்ததாகவும் அன்று ரகுநாத நாயக்கன் குளத்தில் நீராடி, தன் எடைக்குச் சமமான பொன்னை தானமாக வழங்கியதாகவும் துலாபார மண்டபத்தில் காணமுடிகிறது.

19ஆம் நூற்றாண்டு மகாமகம்

1873 மகாமகம்

மகாமகத்திருவிழாவின்போது புலவர்களும், இலக்கிய வாதிகளும் கூடி விவாதம் செய்துள்ளனர். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்களின் கூற்று மூலம் இதனை அறியலாம். “அந்த வருஷம் (1873) மகாமக காலத்தில் கும்பகோணத்தில் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத் சபைகள் நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன் என்கிறார்.

1885 மகாமகம்

1885இல் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது. தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது.

அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர்.

1897 மகாமகம்

1897இல் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது. 1897-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர். அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்யாசங்களும் சம்பாஷணைகளும் நடைபெற்றன.

20ஆம் நூற்றாண்டு மகாமகம்

இருபதாம் நூற்றாண்டில் வந்த மகாமகங்கள் பின்வரும் ஆண்டுகளில் நடந்துள்ளன.

6.3.1909 சனிக்கிழமை
(கீலக மாசி 23)

22.2.1921 செவ்வாய் (ரௌத்ரி மாசி 11)

10.3.1933 வெள்ளி (ஆங்கிரஸ மாசி 27)

26.2.1945 திங்கள் (தாரண மாசி 15)

25.2.1956 (மன்மத மாசி 13)

14.2.1968 புதன் (பிலவங்க மாசி 2)

1.3.1980 சனி (சித்தார்த்தி மாசி 18)

18.2.1992 செவ்வாய் (பிரஜோத்பத்தி மாசி 6)

1933 மகாமகம்

கும்பகோணம் நகரத்திற்கு பிப்ரவரி 1932 இல்தான் முதன்முதலாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஒரு தனியார் நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நகரத்திற்கு வழங்கியது. 1933ஆம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழா தலைத் தீப ஒளித் திருவிழாவாக மின்னியது. தமிழ்நாட்டில் முதல் பேசும் திரைப்படம் துவக்கப்பட்ட ஆண்டு 1931.

1933ஆம் ஆண்டில் கருப்பு வெள்ளைப் படம் பார்த்த மக்களுக்கு இரவுநேரங்களில் வண்ணங்களோடு ஒளி வில்லைகள் இலவசமாக மகாமகக் கண்காட்சியின்போது காட்டப்பட்டது தனிச்சிறப்பாகும்.

இந்த மகாமகத்தின்போது பம்பாயிலிருந்து சர்க்கஸ் போட்டுள்ளார்கள். அனைவரும் அதனை அதிசயமாகப் போய்ப் பார்த்துள்ளார்கள். கூட்டுக்குள் சைக்கிள் விடுதல், நூறடி உயரத்தில் நின்று ஒருவர் தன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு அப்டியே தண்ணீரில் விழுதல் என்ற சாகசமெல்லாம் இருந்தன.

1956 மகாமகம்

மகாமகம் என்பது பொதுவாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரவேண்டியது. 1956 மகாமகம் 11ஆம் ஆண்டிலேயே வந்தவகையில் சிறப்பு பெறுகிறது. 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிங்க ராசியில் கூடிவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது.

1992 மகாமகம்

1992 ஆம் ஆண்டு பக்தர்களின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். மகாமஹத்தன்று முக்கியமான கோவில் தேர்களில் இறைவன் வீதி உலா வந்து மக்களை ஆசீர்வதிக்கிறார்.ஸ்வாமிகள் நீராடும் போதே பக்தர்களும் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். இதை தீர்த்தவாரி என்று அழைக்கிறார்கள். இவ்வாறு செய்வது பல ஜென்ம பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.
இம்மகா மகத்தில் கூட்ட நெரிசலால் பல உயிர்கள் பலியானது

இருபத்தோராம் நூற்றாண்டு மகாமகம்

21ஆம் நூற்றாண்டில் இதுவரை ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது.

2004 மகாமகம்

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் மகாமகம் 6.3.2004 (மாசி 23) இல் நடைபெற்றது.

12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத்திருவிழா தமிழக மக்களுக்கு முக்கியமானதாகும். இந்த டிஜிட்டல் யுகத்தில், பரபரப்பாகிவிட்ட வாழ்க்கை முறையையும் மீறி பல லட்சம் மக்கள் நாடெங்குமிருந்து வந்து கும்பகோணத்தில் குவிந்திருந்தனர் என்பது இந்திய ஆன்மிகப் பாரம்பரியம் தொடர்வதற்கு சான்று.

75,000 பேர் நிற்கக்கூடி மகாமகக் குளத்தில் இந்தியா முழுவதும் இருந்து வந்து நீராடிச் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 25 இலட்சம். கடந்தமுறைபோல் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காகப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 19,500. இந்த மகாமகத்திற்காக சாலைகள், பேருந்து நிலையங்கள், கழிப்பிட வசதிகள் தயார் செய்வதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.40 கோடி.

2016 மகாமகம்

2016இல் அடுத்த மகாமகம் நிகழவுள்ளது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் துவங்கும் மகாமக திருவிழாவின் நிறைவு நாளான 22ம் தேதி மகாமகக் குளத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.

ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாக கருதப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமகம் நடைபெற்றது. மகாமக விழாவினையொட்டி மகாமகம் தொடர்பான கோயில்களில் 24 ஜனவரி 2016 அன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

சிவன் கோயில்களில் 13 பிப்ரவரி 2016 அன்றும் வைணவக் கோயில்களில் 14 பிப்ரவரி 2016 அன்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களிலும் அனைத்துக் கோயில்களும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். அபிமுகேஸ்வரர் கோயிலிலும், நாகேஸ்வரர் கோயிலிலும் 21 பிப்ரவரி 2016 அன்றும் கும்பேஸ்வரர் கோயிலில் 22 பிப்ரவரி 2016 அன்றும் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

மகாமக பெருவிழாவுக்காக தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கோபுரம், மகாமகக் குளம், சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது.

இலக்கிய மேற்கோள்கள்

கி.பி. ஆறு- ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த அப்பர்
பெருமான் கும்பகோணத்தைப் பற்றி பாடும் போது கீழ்க்காணு
மாறுப் பாடியுள்ளார்.

“தாவிமுதற் காவிரி நல்யமுனை கங்கை
சரஸ்வதி
பொற்றாமரை
புட் கரணி தெண்ணீர்க்
கோவியோடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ் கோட்டத்தெங் கூத்தனாரே"

அவ்வாறே
சேக்கிழார் பெருமானும்

"பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழி படுங்கோவில்"

என்று பாடியுள்ளார்.

கோவிந்த தீட்சிதர்

மகாமகக்
குளத்தைச் சுற்றி இருந்த மணல் சேற்றுப் பகுதிகளை நீக்கி,

தூய்மைப்படுத்தி, குளத்தின் உள்ளே ஏறி இறங்க வசதியாக படித்துறைகளை அமைத்தவர். அதன் மேல் தளத்தில் மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு மண்டபங்களையும் கட்டினார். அதன் நினைவாக ஒவ்வொன்றின் அருகிலும் பதினாறு சிவன் கோயில்களைச் சிறியதாக அழகுற வடிவமைத்தார்.

இன்று நாம் காணுகின்ற மகாமகக்குளத்தின் அழகுக்கும், கலை நேர்த்திக்கும், சுந்தர அழகில் சொக்க வைக்கும் சுற்று மண்டபங்களின் எழில் தோற்றத்துக்கும் கோவிந்த தீட்சிதர் முக்கியக் காரணமாய் இருந்தார் என்று வரலாறு சொல்கிறது

ஆகவே இந்த மகாமகம்  நடைபெறும் கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று மகாமக குளத்தில் நீராடி பிறந்த பிறவியின் பயனை அடைவோம்

திருச்சிற்றம்பலம்

அண்ட பிண்ட ரகசியம்

அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி
கண்டறிந்தனர்?
இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும்,
ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே
இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி
கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.
அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த
முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத்
தத்துவம்.இன்னும் ஆழமாகப் புரிய
ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு
தோற்றமோ? அங்கேதான் முடியும் ? என்பதை
புரிந்து கொண்டான். ஆராய முற்பட்டான்.
அதன் விளைவு வெட்டவெளி தோன்றியது.
அதிலிருந்து தோன்றிய ஜோதி அவன் கண்முன்
தோன்றின.அதிலே முளைத்து எழுந்த
அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு
மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக்
கண்டான்.
கடைசியாகத் தன்னைத்தானே ஆராய
முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய
இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை
உணர்ந்தான்.
எங்கோ தொடங்கிய மூல ஆற்றல்
அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள
பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை
கண்டான்.
பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல
சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து
கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின்
பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக
முடியும் என்று கண்டுபிடித்தான்.
கண்டுபிடித்து அடைந்தவன் சித்தன்.
வெட்டவெளியில் ஜோதியாக இருபவனும்
சித்தனே. வெட்டவெளியில் ஜோதியாக
இருபவனும் சித்தனே. அதுவே
பிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே
பிரம்மரிஷி.
பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம்
கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை
அண்டங்களாக, பிண்டங்களாக நடந்து
கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே
(Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம்
எனப்படும்.
அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும்.
இவை இரண்டும் மோதிக் கொள்வதால்
ஏற்படும்போது உண்டான ‘வெப்ப நிகழ்ச்சியே
நெருப்பாகும்.
நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான
வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்ற
போது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே
மண்.இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப்
பிரிவுகள் ஆனபடியால் அவற்றை
பஞ்சபூதங்கள் என்கிறோம்.
மேற்கண்ட பூதங்கள் பேரியக்க மண்டலத்தில்
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர்,மண் என்று
முறையே தோன்றியது . இதே வரிசைக்
கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான
குழந்தையும் வளரும்.
அண்டம் : -------- பிண்டம் : ---------------
குழந்தை :
---------------------------------------------
----------------------------
# ஆகாயம் ---> தலைபாகம் (ஆகாயம்)--->
# ஆக்ஞை
# காற்று -----> கழுத்து (காற்று)--->
# விசுத்தி
# நெருப்பு --------> இருதயம் (நெருப்பு) --->
# அநாதகன்
# நீர் --------------> தொப்புள் (நீர்) ----->
# மணிபூரகம்
# மண் ------------>வயற்றில் (சுக்கில
சுரோணித இடம்)---> # சுவாதிஷ்டானம்
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் அண்டத்தின்
செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும்
செயல்படுகிறது என்பதை ஏளிதாக
அறியலாம்.
பரமானுவிலிருந்து தொடங்கி கூட்டம்
கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின்
குணங்களை ஐந்து வகையாகப் பிரிகின்றோம்.
உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த
ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின?
என்பதை காணும்போது கவர்ச்சியாக உள்ள
அழுத்த இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம்
என்றும்,ஒலி உண்டாகும் இடத்தை காற்று
என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு
என்றும்,சுவை உண்டாகும் இடத்தை நீர்
என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண்
என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய விஞ்ஞானிகள் கூறும் 92 வகையான
மூலக்கூறு(Elements)களும் இவ்வைந்து
பூதங்களில் அடங்கியுள்ளன.
எழுவகை பிறப்பு எப்படி உண்டாயிற்று?
பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி
கொண்ட கோள்.அது ஐந்துவிதமான
அணுக்கூட்டத்தின் தொகுப்பு.இந்த அணு
தொகுப்பு பூமி அதிலுள்ள அணுக்களுக்குத்
தானே முளைக்கின்ற செயல்படுகின்ற ஆற்றல்
இல்லை.
இது செயல்படுவதற்க்கு சூரியனின் ஒளிசக்தி
ஆற்றல் தேவைப்படுகிறது.சூரியகதிர்களின்
வீச்சில் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின.
எழுவகை பிறப்பு உண்டான
விபரமானது.ஜடப்பொருளான பஞ்சபூதம்
ஐந்தும் அதோடு சூரியன்,சந்திரன் என்கிற
இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும்
ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின.
இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப்
பிறக்காமல் ஏன் மனிதன், தேவர்,
தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீர்வாழ்வன
என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி?
என்று ஆய்வு செய்கின்ற போது
சூரியனானது தன்னுடைய சூரியக்
குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை
கிரகித்தது பூமிக்கு அனுப்புவதால் அந்த
ஒளிக்கதிர்கள் பூமியில் படும்போது
பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ
அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப
ஏழுவகையான பிறப்பாக தோன்றியது.
இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத
ஆற்றலும்,சூரியக் குடும்பங்களின் ஆற்றலும்
ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு
தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப
பிறப்பு பேதங்கள் உண்டாயின.
பிறப்பு பேதங்கள் எனப்படுவதுமனிதன்,
தேவர், தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீ
ர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின.
பிண்டத்தில் உடலின் இயக்கம் எப்படி
செயல்படுகிறது?
பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று
ஈர்த்து பூமியாகி செயல்படுகிறதோ அதே
போல் இந்த உடலில் கீழ்கண்டவாறு பஞ்சபூத
சக்திகள் செயல்படுகின்றன.
1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம்
, மாச்சர்யம்
2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல்,
எழுதல் , ஓடல்
3) நெருப்பு – பயம், சோம்பல் , பசி , உறக்கம்,
புணர்ச்சி
4) நீர் – உதிரம், மூளை , உமிழ்நீர், கொழுப்பு,
சுக்கிலம்
5) மண் – மயிர், தோல், நரம்பு , எலும்பு,
தசை
பூமியின் இயக்கத்திற்கு இரவு,பகல் மாறி
மாறி சூரிய சந்திரர்கள் செயல்படுவதால்
பூமியின் செயலும், ஜீவராசிகளும்
வாழ்கின்றன .
அதே போல மனித உடலான பிண்டத்திலும்
இடகலை என்கிற சூரியகலையும், பிங்கலை
என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம்
நடைபெறுவதால் மனித பிண்டம்
இயங்குகிறது.
பூமியில் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை
இரவும் பகலும் மாறி மாறி
செயல்படுவதுபோல் இந்த மனித உடலில்
சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு
மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி
செயல்படும்.
ஆகவே மேற்கண்ட விளக்கத்தின் மூலம் எந்த
சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை
இயக்குகிறதோஅதே ஆற்றல்தான் இந்த மனித
உடலையும் இயக்குகிறது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு
:-
பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம்
சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள்.
அதேபோல் மனித உடலில் தலைக்கு
கீழ்ப்பகுதி பிண்டம் தலைப்பகுதி
அண்டமாகிறது.
அண்டத்தில் எழு கிரகம் செயல்படுகின்றன.
அதேபோல் பிண்டத்தில் அதாவது தலைப்
பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.
கிரகம் என்றால் என்ன ?
கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள்
என்பதாகும். நமது மனித உடலில்
தலைப்பகுதியில் உள்ள கண் -2 , காது -2 ,
மூக்கு துவாரம் -2, வாய் -1 ஆக இந்த ஏழு
துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை.
கண் காட்சியை கிரகிக்கிறது. வாய் சுவையை
கிரகிக்கிறது. கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில்
உள்ளது போல் பிண்டத்திலும் நடைபெறுவது
நமக்குத் தெளிவாகப் புரிகிறது.
அடுத்த நிழல் கிரகம் என்று ஏன் ? ராகு , கேது
என்று இரண்டு கிரகத்தை வைத்தார்கள் ?
ஆய்வு செய்யும்போது பொது நியதிப் படி
ஒரு பொருளை கிரகிக்கின்றபோது மற்றொரு
புறம் வெளியே தள்ளுகின்ற செயலும்
நடைபெற வேண்டும் என்பது விதி.
அந்த அடிபடையிலே தலைப்பகுதியில்
கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம்
, மலம் , மூலமாக மனித உடல்
வெளியேறுகிறது.
எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின்
தலையும் , கேது என்றால் பாம்பின் உடலும்
வைத்தார்கள் ? என்ற கேள்வி எழுவது
இயல்பு.
பாம்பின் தலை என்றால் விஷத்தைக்
குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷத்தை
என்பது மலத்தை என்பது பொருள். மலத்தை
தள்ளும் இடமே விஷமாகும்.
அதைதான் மனித உடலில் எருவாயை ராகு
என்றனர். அதேபோல் கேது என்பது பாம்பின்
உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது
படைப்புக்கு உரியது.
படைப்புக்கு காரணமாவது சுக்கிலம்
என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில்
கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு
உரியவையாக இருப்பதால் ஞானகாரகன்
என்றும் கூறினர்.
மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழு
கிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு
நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே
நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும்
காட்சியளிகிறது.
அதேபோல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக
செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது
உடலிலே சப்த தாதுக்களாகச்
செயல்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு செயலும் எப்படி
நடைபெறுகின்றன ?
என்பதை துல்லியமாக கனகிட்டோமானால்
அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை.
பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை
என்றே தெளிவாக உணரலாம்.
கர்மவினை என்பது உண்மையா?
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை,
மூலசக்தியை ஆராய எத்தனை எத்தனைக்
குழப்பங்கள், கணிப்பு, கருவிகள் என்று
தேடுகிறான், தேடுகிறான் தேடிக் கொண்டே
இருக்கிறான். ஆனால் சித்தன் அதைக்
கண்டுபிடித்து சொல்லி உள்ளான். அதை ஏன்
ஏற்க யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள்?
சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலில்
“ ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம் ”
என்று இந்த பிரபஞ்சம் முதன் முதலில்
(ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த
கனலே. குளிரும்போது அது அணுவாக மாறி
இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது
என்று அன்றே கூறியுள்ளார்கள்.
ஆக முதலிலே பிறந்தது “சத்தம்”. சத்தம்
என்றால் ஒலி என்று பொருள்.
ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும்
உண்டாகும். இது இயற்கை.
இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான
முதல் காரணமாக இருப்பது ஒளியும்,
ஒலியும் தான்.
அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின்
இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன்,
சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான்.
மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை
இயங்குகிறது.
அவ்வளவு ஏன் ? இன்றைய விஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள்,
ஜடப்பொருள்கள் இயங்குவதற்கு ஒலி, ஒளி
இல்லை என்றால் நடைபெறுமா? நிச்சயமாக
நடைபெறாது.
எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத்தானே
இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆக ஒலி, ஒளி,
அதன் அதிர்வு இம்மூன்றும் சேர்ந்ததுதான்
மூலசக்தி. அதைத்தான் சித்தர்கள் அ, உ, ம
“ஓம்” என்று பெயர் வைத்து, எல்லா
இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான்
காரணம் என்றனர்.
இது விஞ்ஞானமில்லையா? இது என்ன
மூடத்தனமான கொள்கையா ? சிந்தியுங்கள்
அன்பர்களே…
சிலை வடிப்பவன் எவனொருவன் சிலை
முழுவதும் வடித்து சின்னஞ்சிறு உளிகளால்
நெளிவு சுளிவு அனைத்தையும் வைத்து
சிலை முடிகின்றானோ, அவனால்தான் அந்த
சிலையின் அத்தனை ஆற்றலையும் உணர
முடியும், கூறமுடியும்.
அதே போல இந்த பிரபஞ்சக் கணக்கீட்டை
கண்டுபிடித்து பிரபஞ்சத்திற்கும்,
மனிதனுக்கும், ஜீவராசிகள், தாவரங்கள்
அத்தனைக்கும் உரிய ஒப்பீடு தத்துவங்களை
அறிந்து, இந்த பிரபஞ்சம் இதனை யுகங்களில்
அழியும் என்று எவன் சொல்கிறானோ?
அவனே அந்தக் கொள்கையில் முழு
உண்மையை அறிந்தவனாவான்.
ஆகவே பிரபஞ்சத்தை கணக்கிட்டு ஆயுள்
நிர்ணயம் செய்து பிரபஞ்சம் அழிவதையும்,
கணக்கிட்டவன் சித்தன். சித்தர்கள் சொன்ன
எந்த உண்மையும் காலத்தால் அழிக்க
முடியாதது.
சமீபத்தில் கிடைத்த செய்தி. மூளையின்
பதிவுகளை கண்டுபிடித்த கருவியானது,
மூளையில் இன்னொரு அதிர்வலைகள்
இருக்கின்றன என்பதை கருவி காட்டியது, அது
என்ன? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள்
கூறுவது கர்மவினை அதிர்வு கோடு
(Intronce) என்றார்களாம்.
ஆகவே கர்மவினை என்பதை என்றைக்கு
ஒத்துக் கொண்டானோ! அப்போதே சித்தர்கள்
சொல்லியதை ஒத்துக் கொண்டாக வேண்டும்!
முன்பிறப்பு, அடுத்த பிறப்பு உண்டு என்பதை
ஒத்துக் கொண்டாக வேண்டும்.
கர்மவினை என்பதே முற்பிறப்பின் தொடர்
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஓம்” என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச
இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூலசக்தி
என்பதை கோரக்கர் முதல் கொங்கணர்,
அகத்தியர், ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக்
கொள்கிறார்கள்.
“ஓம்” தான் மூலசக்தி என்பதில் எந்த
சித்தருக்கும், ஞானிகளுக்கும் வேறுபாடு
இல்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை
பேரும் உண்மையை கண்டவர்கள்.
ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் மத்தியில்
ஏன் இத்தனை கருத்து வேறுபாடு? ஆய்வு,
ஆய்வுப் பொருள் எல்லாம் என்ற கேள்விக்கு
விஞ்ஞான மனிதனுடைய அறிவுக்கு
எட்டியவை, அவ்வளவுதான்.
எத்தனைத்தான் கருவி கரணாதிகள் வைத்துச்
செய்தாலும், இவன் அறிவின் எல்லைக்
கோட்டின் அளவின் அடிப்படையிலேதான்
அந்த கருவிகள் நிர்மாணிக்கப்படும்.
மனித அறிவுக்கு உண்டான கருவி
அதற்கேற்றாற் போல் அந்த அளவிலேயே
நமக்கு பதில் சொல்லும். ஆகவே விஞ்ஞானம்
முழுமைநிலை பெறவில்லை என்பதே நமக்கு
கிடைக்கும் பதில்.
பிண்டம் பற்றிய சிந்தனை இது:
............................................................
..............................
............................................................
.......................................
‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘
இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் எது
இருக்கின்றதோ, அது நமது உடலிலும்
இருக்கின்றது என்பதே.
அண்டம் -- உலகம்
பிண்டம் -- உடல்
இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி
இறைவன், உலகை பஞ்ச பூதங்களைக்
கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின்
கூற்றின் படி, உலகம் பஞ்ச பூதங்களால்
உருவாகி இருக்கின்றது.
பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம்
இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக்
கருத்துக்கள் இல்லை.
அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்
ஆகிய ஐந்தாகும்.
இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
உள்ளது என்கின்றார்களே அது சரியா?
நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட
அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி
இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ
குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்)
உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது.
வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி
விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம்
தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது
உடலில் இருக்கின்றது.
நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன.
அவைகள் இல்லாது போனால் உடலின்
இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து
அழிந்து விடும். எனவே நீரும் உடலின்
இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.
காற்று - உடல் இயங்க காற்று மிக
முக்கியமானதொன்றாகும். காற்று
இல்லையெனில் சுவாசிக்க முடியாது.
சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.
ஆகாயம் - வெற்றிடம். உடலினுள்
வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள்
போன்றவைகள் உதாரணத்திற்கு.
வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும்
அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.
நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து
இருப்பதனைப் போல மனித உடலும்
நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது.
உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு
இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில
நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி
விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச்
சேர்ந்து விடுகின்றது.
இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு
வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை
வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்ட
ு இருக்கின்றது என்பது தெரிகின்றது.
அதாவது,
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
அண்டத்தில் உள்ள உலகங்கள் எல்லாம்
பிண்டத்தில் இருக்கிறது என்று அபிதான
சிந்தாமணி பட்டியலிட்டிருக்கிறது அவை :
....................................................................
அண்டத்தில் உள்ளவை எல்லாம் பிண்டத்தில்
உண்டு என்பது புராண உண்மைகளுள் ஒன்று.
எவ்வகையெனின்; உள்ளங்கால்- அதலம்,
கணைக்கால்- விதலம், முழந்தாள் -சுதலம்,
அதற்கு மேல் -நிதலம், ஊருதலாதலம்,
குஹ்யம்- ரசாதலம், இடை -பாதாளம், நாபி -
பூலோகம், வயிறு -புவர் லோகம், இருதயம்-
சுவர்க்கம், தோள் -மகாலோகம், முகம்-
ஜனலோகம், நெற்றி-போலோகம், சிரம் -
சத்தியலோகம், திரிகோணம் -மேரு,
கீழ்க்கோணம் -மந்தரம், அக்கோணத்துக்கு
வலப்பக்கம்- கைலை, இடப்பக்கம் -இமயம்,
மேற்பக்கம் -நிஷதம், தென்பக்கம் -கந்தமாதனம்,
இடக்கையின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள்
-வருண பருவதம், எலும்பு -நாவலந் தீவு,
மேஷத் -சாகத்தீவு, தசை- குசத்தீவு, நரம்பு-
கிரௌஞ்சத் தீவு, தொக்குச் -சான்மலித் தீவு,
மயிர்த்திரள் -பிலக்ஷத்தீவு, உகிர்
புஷ்கரத்தீவு, மூத்திரம்- உப்புக்கடல், நீர்-
பாற்கடல், கபம் -சுராக்கடல், மச்சை -
நெய்க்கடல், வாய் நீர்- கருப்பங்கடல், இரத்தம் -
தயிர்க்கடல், வாயில் உண்டாம் மதுரப்புனல் -
சுத்தோதகம், சரீரத்தில் இரண்டு சக்கரங்கள்
உள்ளன. அவற்றில் நாதசக்கரத்தில்-
சூரியனும், பிந்து சக்கரத்தில்- சந்திரனும்
நேத்திரங்களும் -அங்காரகனும், இருதயத்தில் -
புதனும், வாக்கில் -குருவும், சுக்கிலத்தில் -
சுக்கிரனும், நாபியில் -சனியும், முகத்தில் -
ராகுவும், காலில் -கேதுவும் இருக்கின்றனர் -
என்கிறது அபிதான சிந்தாமணி.
............................................................
.................................
............................................................
....................................
திருமூலர் கருத்து:
வாயுவு மேலே மருவிற்று ஆகாசம்
காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது
பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி
பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே.
திருமூலர் – 476
இவ்வண்டத்தின் மேல் பூமியும்
பூமியின்மேல் நீரும், நீரின்மேல்
அக்கினியும்,அக்கினியின்மேல்
வாயுவும்,வாயுவின் மேல் ஆகாசமும்
நிற்கிறது. இது ஒரு அண்டத்தை
பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு
அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார். இனி
பிண்ட உற்பத்தியை கேள் என்று
பார்த்திடு மாங்கிக்ஷம் பரித்த பிருதிவி
வார்த்திடு ரத்தம் வழலையில் நீராச்சு
தோற்றிடு வாய்வு சுழண்டேறிப் புக்கிற்று
காற்றோடு தீயுங் கலந்தே விரும்பிற்றே.
திருமூலர் – 477
இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின்
தத்துவமாகும், சளி,ரத்தம் நீரின்
தத்துவமாகும், உடலை சூடு உண்டாக்குவது
அக்கினியின் தத்துவமாகும்,
நாம் விடும் மூச்சு வாயுவின் தத்துவமாகும்.
நம் உடலில் அக்கினியானது வாயுவுடன்
கூடியே உள்ளே செல்கிறது.
கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச
மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி
குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்
தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.
திருமூலர் – 478
அதாவது அண்டமான வெளிமண்டலங்கள்
பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை
கூறுகிறார்.
பூமி – மாமிசமாகவும்
நீர் – இரத்தமாகவும்
நெருப்பு – நம் உடல் சூடாகவும்.
ஆகாயம் – கேட்டுக்கும் சக்தியாகவும்.
கடல் – வியர்வையாகவும், சிறுநீராகவும்
மாகாமேரு (பூமியின் மேற்ப்பக்கம்) -
கழுமுனையாகவும்
..................................................
வள்ளலார் கருத்து:
அண்டமும் பிண்டமும் கடவுளும் !
அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள்
எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற
நிறைந்தே
கொண்டவெலாங் கொண்ட வெலாங் கொண்டு
கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு
சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய்
அதுவுங்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி
வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம்
வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே
கண்டீர் !
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு
அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு
நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார்
ஆங்கே
அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக்
கண்டாரேல்
அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்
இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று
உரைத்தேன்
சொன்ன வெளிவரை யேனும் துணித்து
அளக்கப் படுமோ !
நாம் வாழும் அண்டம் போல் பல கோடி
அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள்
வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான
பொருள்கள்,அதற்கு உண்டான
இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல்
நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து
கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும்
சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல்
பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப்
பொருள் உண்டு.அது பலகோடி
அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள
எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல்
பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும்
இயக்கம் இடமானது அருள் பெரு
வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள்
அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம்
என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி
இடைவிடாது செயலாற்றிக் கொண்டு
இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே !
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக்
கடவுளாகும் என்கிறார் வள்ளலார்.
 

Most Reading

Total Pageviews