Pages

சனி மகா பிரதோஷம் ஸ்பெஷல்

Saturday, 12 December 2020

🚩🕉🚩🕉🚩🕉🚩🕉️

*சனி மகா பிரதோஷம் ஸ்பெஷல் !*
➖➖➖➖➖➖➖➖
🟡🟢🔵🟣⚫️🟤🔴🟠
*சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..*

1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்  பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால்  சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது. 

6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

7. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று  செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

8. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில்  மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

9. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.

11.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

12. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

13. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற் றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின் னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

14. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தி யாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

15. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

16. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை  வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.

17.  ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.  நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது.

அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.

சிவ சிவ !

⚛🌸⚛🌸⚛🌸⚛🌸

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் 2020 | அஸ்வ வாகனம் | LIVE

Saturday, 26 September 2020


  திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் 2020 | அஸ்வ வாகனம் |  LIVE

திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் இராகு பெயர்ச்சி விழா 2020

Friday, 25 September 2020


 

திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் இராகு பெயர்ச்சி விழா 2020

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!!!

Sunday, 23 February 2020


நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ணன் அளித்த பொக்கிஷம்..

பெற்றோர் செய்த பாவம் யாரைச் சேரும், ஒருவர் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அவருக்கு கிடைக்கும் பலன்கள், ஆனது இறப்புக்குப் பிறகும் அவருடைய சந்ததிகளுக்கு கிடைக்கும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புண்ணியங்களை சேர்த்து கொண்டிருந்தால், அவரது சந்ததிகள் ஆனது வாழையடி, வாழையாக மிகுந்த, உயர்ந்த செல்வம் நிலையோடு நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

அந்தவகையில் பெற்றோர் செய்யும் பாவமானது யாரைச் சேரும், யாரை சேர்ந்தே தீரும் என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஒரு மனிதன் செய்யும் பாவமானது எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கான பலனை பாவம் செய்த மனிதனோ அல்லது அவனுடைய இறப்பிற்குப் பிறகு அவனுடைய சந்ததிகள் அதை அனுபவிக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி ஆகும். இது தெய்வ குற்றம் கூட..

ஒருவர் நன்றாக வாழும் பொழுது மற்றவர்கள் அவர்களை பார்த்து அவருடைய பெற்றவர்கள் புண்ணியம் செய்து இருப்பார்கள் போல இவரும் நல்ல பணக்காரனா எந்த வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறான் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம்.

இதுவே ஒருவன் கஷ்டப்படும் பொழுது பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைகளை சேரும் சொல்லுவாங்க, அதா இவன் நாய் படாத பாடுபடுறான் போல என்றும் கூறுவார்கள்.

இதை நாம் அனைவரும் புரிவதற்காக கிருஷ்ணபகவான் மிக எளிய கதையின் மூலம் விளக்குகிறார்.

குருசேத்திரம் வெற்றிகரமாக முடிந்தது பாண்டவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் உதவியோடு வெற்றி அடைந்தவர்கள்.. அந்த நேரத்தில் திருதராஷ்டிரன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதிலும் தர்ம நியாயங்களோடு அரசாட்சி புரிந்து மக்களை நன்றாக காத்து வந்தேன்.

அப்படி இருக்க எனது 100 பிள்ளைகளையும் ஒருவர் கூட மிச்சம் இருக்காமல் அனைவரும் இறந்ததற்கான காரணத்தை கூறு என்று கேட்கிறார்.. உடனே கண்ணன் சிரித்துக்கொண்டே நான் ஒரு கதை சொல்கிறேன் அந்த கதையின் முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன் என்று கூறுகிறார்..

திருதராஷ்டிரன் சரி என்று கூறுகிறார்.. கிருஷ்ணன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்..

நீதிநெறி தவறாத ஒரு மன்னன் தன்னுடைய நாட்டை மிக செழிப்பாக மக்களின் குணமறிந்து நீதி, நெறியோடு ஆட்சி செய்கிறார். அந்த அரசனிடம் ஒரு ஏழை சமையல்காரனாக சேர்கிறார். அவனுடைய கை பக்குவமே மிக அருமையாக இருக்கும் நிறைய உணவு வகைகளை மன்னருக்கு பிடித்ததுபோல் சமைத்து பரிமாறுவதில் அவனுக்கு நிகர் அவனே தான்.

அவ்வளவு கைப்பக்குவம் அவனிடத்தில் இருக்கும். அந்த சமையல்காரன் மன்னரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றும், சீக்கிரத்தில் பணக்காரனாக வேண்டும் என்றும், ஒரு விபரீத முயற்சி மேற்கொள்ள முடிவு செய்கிறான்.

அந்த விபரீத எண்ணத்தில் அரண்மனையில் உள்ள குளத்தில் இருக்கும் அன்னத்தின் குஞ்சு ஒன்றினை யாருக்கும் தெரியாமல் பிடித்து மன்னருக்காக சமைத்தும் கொடுக்கிறான். அதைத்தானே பரிமாறவும் செய்கிறான்.

அது என்ன உணவு என்று தெரியாமலேயே மன்னரும் அந்த ருசிக்கு மயங்கி அடிக்கடி அதே உணவை சமைத்து தருமாறு சமையல் காரனிடம் கட்டளையிடுகிறார். இப்பொழுது கிருஷ்ணர் கதை கூறுவதை நிறுத்திவிட்டு திருதராஷ்டிரா . மன்னன், சமையல்காரன் இருவரில் யார் தண்டனைக்குரியவர்கள், யார் தவறு செய்தவர்கள் என்று கேட்கிறார் கிருஷ்ணன்.

உடனே திருதராஷ்டிரன் தான் சாப்பிடுவது என்ன வகையான உணவு என்று கூட தெரியாமல் அதை ருசித்து சாப்பிட்டு மீண்டும், மீண்டும் அதையே சமைக்கச் சொல்லி சமையல் காரனிடம் கட்டளையிட்ட மன்னரே குற்றவாளி என்று கூறுகிறார்.

உடனே நீதிநெறி தவறாத அரசன் என்பதை நிரூபித்து விட்டாய். அதன் காரணமாகவே 100 குழந்தைகளும் சிறந்த மனைவியும் உனக்கு வாழ்க்கையில் கிடைத்தார்கள்.. ஆனால் நான் இப்பொழுது சொன்ன கதையும் உன்னை பற்றியதுதான்.

போன பிறவியில் நீயே மன்னனாக இருந்து நீ சமையல்காரன் செய்து கொடுத்த அன்ன குஞ்சுகளால் செய்யப்பட்ட உணவையே சாப்பிட்டாய். இறந்த அண்ணம்களின் தாய் எந்தவகையான வேதனை அடைந்து இருக்கும் என்பதை நீ உன்னுடைய 100 பிள்ளைகளை இழந்து இப்பொழுது அறிந்து கொண்டிருக்கிறாய்..

நீ செய்த பாவம் என்னவென்று இப்போது புரிகிறதா..! நீ இருந்தாய் அப்படி இருந்தும் தினம், தினம் சாப்பிட்ட உணவானது என்னவென்று தெரியாமலேயே இரசித்து சாப்பிட்டதால் கண்ணிருந்தும் குருடனாய் ஆகவே இந்த பிறவியில் குருடனாக நீ பிறந்தாய்.

அந்த அன்னம் பட்ட கஷ்டத்தை நீயும் இப்பிறவியில் பட்டு போன பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் அனுபவிக்கிறாய் என்று கூறுகிறார் கண்ணன்.. நான் செய்த பாவம் ஆனது தன்னையும் தண்டித்து தன்னுடைய பிள்ளைகளையும் தண்டித்து விட்டதே என்று திருதராஷ்டிரன் தலை குனிந்து தன் தவறை உணர்கிறார்..

நம்முடைய இப்பிறவியில் செய்யும் பாவமானது, நம் பிள்ளைகளை வந்தடையும் என்பது கிருஷ்ணன் சொன்ன கதையின் மூலம் நமக்குப் புரிகிறது.. ஆகவே இப்பிறவியில் பாவம் ஏதும் செய்யாமல் புண்ணியங்களை சேர்ப்போம்.. அந்த புண்ணியங்களை நம் பிள்ளைகளுக்கு சொத்துக்களாக கொடுப்போம்..

கர்ம வினை

Friday, 14 February 2020

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. 

       ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?

    நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

  அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.

   சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.

      சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*
எனப்படுகிறது.

     *சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.

     சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*

சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது.

     பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.

     கனவில் கூட காண முடியாத  பல *ஆச்சர்யங்கள்* நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.

*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?*

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

    *நாமே* நம் தாயை, *தந்தையை,*
*சகோதர* சகோதரிகளை,  *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,*  *தேர்ந்தெடுப்பதில்லை.*

    நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும்
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.

முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .

    ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.

     அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில்
#வேறு_பார்வையில் தோன்றுவர்.

   எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.

     அது என்ன ?
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும்
*கர்ம* கதிகளின்
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?

இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  *"கர்ம வினை"* தான் .

    இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.

அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். 

    அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.

     இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

    இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

     இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.

     அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .

    துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.

இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா"_
என நம் மதம் போதிக்கிறது.

    நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு.

அப்படி என்றால்
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது. 

   இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது.

     நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,

நீ என்ன செய்யப் போகிறாய் ?

எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?

எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.

    ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.

அதேபோல பெரும் பணக்காரர்களையும்  *'துக்கங்கள்*' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது.

பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._ 

நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.

_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._

    _நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
*கொடுக்க* முடியாது🙏
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

ஒரு யோகியின் சுய சரிதம் -பரமஹம்ச யோகனந்தர் Auto Biography of a yogi -ParamaHamsa Yoganandhar

AutoBiography of Paraahamsa Yoganandhar






 

Most Reading

Total Pageviews