Pages

காலம் என்பது உண்மையில் உள்ளதா?

Monday, 27 March 2017

கிறிஸ்துவர்களில் பலர் இன்னும் கூட பைபிள் கூற்றுப்படி வெறும் ஆறாயிரம் ஆண்டுகளில் பூமியோ மனிதனோ தோன்றியதாக நம்புகிறார்கள். சில கிறிஸ்துவ மதபோதகர்கள் இன்னும் சிறப்பாக பைபிளை ஆராய்ந்து பூமி அக்டோபர் 23 கிமு 4004 ஞாயிற்றுக் கிழமை தோன்றியதாக அறிக்கை அளித்துள்ளனர். இன்றைய நவீன விஞ்ஞானமோ இதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறது.

நம்முடைய ஹிந்து தர்மம், யுகங்களாய் பிரிக்கிறது பூமியின் காலத்தை. ஒவ்வொரு யுகமும் பல லட்சம் வருடங்களாய் பிரிக்கப்பட்டன. இதை விஞ்ஞானம் வளராத காலத்தில் கேலிக் கூத்து என்றனர் பலர். ஆனால் இன்று நவீன விஞ்ஞானம் பூமியின் பல கற்பாறைகளை ஆராய்ந்து அவை நான்கு பில்லியன் வருடங்கள் பழமையானவை என்கின்றனர். அதாவது நானூறு கோடி ஆண்டுகள்.

அடுத்து இறைவனையும், ஜீவ ஆத்மாக்களான நம்மையும் காலங்களுக்கு அப்பாற்பட்டவை என்கிறது நம் வேதம் ? இது சாத்தியமா ? இந்த பிரபஞ்சத்தின் வயது சில ஆயிரம் ஆண்டுகளே என்று அனுமானித்தார் சார் ஐசக் நியூட்டன். நவீன விஞ்ஞானம் உருவெடுக்கும் வரை இப்படித்தான் பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். இன்று நாம் வாழும் நவீன உலகின் பல மாற்றங்களுக்கு காரணமாயிருந்த திரு ஆல்பர்ட் ஐன்ஸ்டியனோ பிரபஞ்சம் வரம்புக்குள் அடங்காதது என்று உரைத்தார். "பிக் பாங் தியரி" என்று சொல்லப்படும் பெருவெடிப்பு ஏற்பட்டு 13.75 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாய் கணக்கிடும் விஞ்ஞானிகள் கூட பெருவெடிப்புக்கு முந்தைய நிலையை குறித்து ஏதும் சொல்வதில்லை. அதற்கு முன் பிரபஞ்சம் என்னவாக இருந்தது ?

"பூர்ணமத பூர்ணமிதம் பூர்நாத பூர்நம் உதச்யதே,
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ வஷிஷ்யதே"
என்கிறது பிரஹத் ஆரன்யக உபநிடதம்.

அது எல்லையற்றது (பிரம்மம்),
இது எல்லையற்றது (பிரபஞ்சம்)
எல்லையற்றதிலிருந்து, எல்லையற்றது தொடங்குகிறது, அது அதன் எல்லையற்ற தன்மையிலிருந்து அந்த எல்லையற்ற தன்மையை எடுத்துக் கொள்கிறது (பிரபஞ்சம்). அது அந்த எல்லையற்றதாகவே (பிரம்மம்) இருக்கிறது. சாந்தி சாந்தி சாந்தி.

இதை நவீன விஞ்ஞானம் வளராத காலத்தில் படித்திருந்தால் குப்பை என்று ஒதுக்கியிருப்பார்கள். அப்படித்தான் பலர் ஒதுக்கினார்கள். ஆனால் இன்று வேதத்தின் பல கூற்றுகள் நமக்கு புரிய தொடங்கியுள்ளன. மேலும் நம் அறிவு விரிய விரிய பல நமக்கு புரியத் தொடங்கும். இதை படித்துவிட்டு சிலர் நினைக்கலாம். அது எப்படி காலம் எல்லையற்றதாக இருக்கும் ? உண்மையில் காலம் என்பதே நிலையானது இல்லை.  காலம் என்பதே ஒரு ஒப்பிட்டு பார்த்து அறிந்துக் கொள்கிற அளவுகோல் அவ்வளவுதான்.

எனக்கு 60 வயது ஆகிவிட்டது என்று நான் சொன்னால், அது இந்த பூமி அறுபது முறை சூரியனை சுற்றுவதை குறிப்பதாகும். இப்போது சூரியனை சுற்றும் மற்றொரு கோளான பூளூட்டோவில் ஒரு உயிரினம் பத்து வயது வரை வாழ்ந்ததாக எடுத்துக்கொள்வோம். நம் கணக்குபடி அது 2600 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது. ஏனேனில் ப்ளூட்டோ ஒரு முறை பூமியை சுற்ற நம் கணக்குபடி 260 ஆண்டுகள் பிடிக்கும். இப்படி காலமென்பதே ஒரு தொடர்புப்படுத்தி அறியக் கூடிய ஒரு சங்கதியே தவிர உண்மையானது அல்ல. காலம் என்பதே ஒரு மாயை என்கிறது நவீன விஞ்ஞானம், நம் வேதம் அதை பல ஆயிரம் ஆண்டுகள் முன்பேயே கூறிவிட்டது.

 

Most Reading

Total Pageviews