Pages

Tuesday, 25 June 2019

வேடா் எனும் சொல்லுக்குப் பொருள் என்ன

🔥 *சிவமயம் சிவாயநம*🔥

    *திருச்சிற்றம்பலம்*

தொிந்த பொருளைத் தவிர தொியாத பொருளும் உண்டோ என்று கேட்டிருக்கிறீா்கள்.

ஏனென்றால் வேட்டுவத் தொழில் புாிவாரை வேடா் என்று அழைப்பது மிகப் பிரபலம். ஆனால் அதே சொல் வேடம் புனைந்தவா் என்றும் பொருள் படும். விஷம் விடமானது போல் , வேஷம் வேடமானது என்பா்.

இரண்டு பொருளிலுமே திருமூல தேவ நாயனாா் ஒரு மந்திரத்தில் இச்சொல்லைப் பயன் படுத்துகிறாா்.

*" தவம் மிக்கவரே தலையான வேடா்*

*அவம் மிக்கவரே அதிகொலை வேடா் "*    திருமந்திரம்.

தவ உணா்வோடு சிவ சின்னங்களைத் தாித்தவரே தலையான வேடத்தைப் புனைந்தவராவா். அவ் உணா்வு அகத்தே ஏதுமின்றி அச் சின்னங்களைத் தாித்தவரோ கொலைத் தொழில் புாியும் வேடுவராவா்.

எனவே *சின்னங்கள் , உணா்வுகளின் பிரதிபலிப்பாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் வேட மாத்திரையாக விளங்குவதில் பயனில்லை.*

மின்சாரம் பாயாத ( டியூப் லைட் ) வாழைத் தண்டு விளக்கு வெண்மையாக இருக்கும் ; ஆனால் மின்சாரம் பாய்ந்தாலோ அந்த வெண்மை ஔிரும் . *தவ உணா்வு இல்லாதவா் வேடம் அணிந்தால் அது மின்சாரம் பாயாத ( வாழைத்தண்டு ) விளக்கே !*

🔥 *சிவவிஜயகுமாா்.*  1070

Friday, 21 June 2019

மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம்.

மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.

சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.

சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.

முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.

சமாதி அடைய விருப்பம் :

இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.

அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.

ஆலய அமைப்பு :

கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது.

இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்..

விழாக்கள் :

ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.

கசப்புத் தன்மை :

ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்திருந்தார். இதையடுத்து அனைவருக்கும் அன்னமும், பருப்பும் பரிமாறப்பட்டது. அப்போது உணவு வைத்தவர், தவறுதலாக நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெயை எடுத்து பரிமாறிவிட்டார். சிற்றம்பல நாடிகளும், அவரது சீடர்களும் எந்த வித வேறுபாடுமின்றி உணவருந்தினார்கள். ஆனால் கண்ணப்பர் என்ற சீடர் மட்டும், அதன் கசப்புத் தன்மையை உணர்ந்து, அதை வெளிப்படுத்தவும் செய்தார்.

இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள், ‘நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும்’ என்றார்.

தனது தவறை உணர்ந்த கண்ணப்பர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். தனது குருநாதருடைய திருவடியை தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி வாழ்ந்து வந்தார். சில காலம் சென்ற நிலையில், தன் குருவும், மற்ற சீடர்களும் சமாதி நிலையை அடைவது பற்றி அவருக்கு செய்தி கிடைத்தது. இதையடுத்து அவர் குருவின் இருப்பிடம் தேடி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் சமாதிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதனால் சமாதிகளை வணங்கிய அவர், குருவின் சமாதி முன்பாக அமர்ந்து கண்ணீர் விட்டார்.

‘ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்கா

மீண்டும் எழுந்தருள வேண்டாவோ– நீண்டவனும்

ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்

பூரணமா வையாத போது’

– என்று மனமுருகிப் பாடினார்.

அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரை, தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார் சிற்றம்பல நாடிகள்..

அமைவிடம் :

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்..

திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம்


சிவாயநம
நமசிவாய

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 95 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 158 வது தலமாக விளங்கும்

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு  லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய  ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.  (ரிண- கடன், விமோசனம் - நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் - ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.

ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.

இவ்விறைவர், ரிண  விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும்.

கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி என்று கூறும்
தலமாக திகழும்


திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருச்சேறை
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக  அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் ஞானாம்பிகை
அம்பாள் உடனுறை அருள்மிகு சாரபரமேஸ்வரர் (செந்நெறியப்பர்)
சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.

Tuesday, 18 June 2019

திருநாலூர் மயானம் ஞானபரமேஸ்வரர் ஆலயம்


சிவாயநம
நமசிவாய

தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருச்சேறையில்  இருந்து  குடவாசல் செல்லும் வழியில் வடக்கே  4 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 96 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 159 வது தலமாக விளங்கும்

சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.
பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகின்ற
தலமாக திகழும்

மூவரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்

திருநாலூர் மயானம்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக  அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் ஞானாம்பிகை (பெரியநாயகி)
அம்பாள் உடனுறை அருள்மிகு ஞானபரமேஸ்வரர் (பலாசவனநாதர்)
சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.

கிரகங்களின் பார்வை என்றால் என்ன

சென்ற பாடத்தில் ஆடி மாதம்-30-ம் தேதிக்கு கிரக நிலையைப் போட்டோம். சந்திரனைத் தவிர மீதி எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டோம். இப்போது நாம் சந்திரனைப் போடப் போகிறோம். நாம் ஆடி 30-ம் தேதிக்கு என்று கிரகங்களைப் போட்டோமே தவிர எந்த நேரத்திற்கு என்று போடவில்லை. இப்போது மாலை 5.00 மணிக்கு க பிரகங்களைப் போடுவோம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆடி 30-ம் தேதி அன்று "நக்ஷ" என்ற கட்டத்திற்கு எதிராக "ரோ 2311" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது சூரிய உதயத்திலிருந்து 23 நாழிகை 11 வினாழிகை ரோகி ணி நஷ்ஷத்திரம் இருக்கிறது. அதாவது பகல் 03-18 முடிய ரோகிணி நஷ்ஷத்திரம் இருக்கிறது. ஆங்கில மணியைப் பக்கத்திலுள்ள கட்டத்தில் கொடுத்து இருக்க பிறார்கள். சந்திரன் 23நாழிகை 11 வினாழிகை முடிய மிருக சீரிஷம் நக்ஷக்ஷத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் எனப் பொருள். அதாவது பகல் 03-மணி 18 நிமிஷங்கள் வரை சந்திரன் ரோகிணியில் இருக்கிறார். அதற்குப்பின் அவர் எங்கு செல்வார்? அடுத்த நக்ஷக்ஷத்திரத்த பிற்குத்தான். அடுத்த நக்ஷக்ஷத்திரம் என்ன? மிருகசீரிஷம் தான். மறுநாள் பகல்20-நாழிகை 45 விநாழிகை முடிய (அதாவது பகல் 03மனி 18நிம் ஷங்கள் வரை) சந்திரன் மிருகசீரிஷத்தில் இருப்பார். ஆடி 31-ம் தேத பியைப் பார்த்தால் இது தெரிய வரும்.

நாம் எடுத்துக் கொண்ட நேரமான மாலை 5.00மணிக்கு சந்திரன் ம பிருகசீரிஷத்தில் இருக்கிறார் அல்லவா. இப்போது ஒரு சிறு குழப்பம். ம பிருகசீரிஷம் 1,2 பாதங்கள் ரிஷபத்திலும், 3,4 பாதங்கள் மிதுனத்திலும் இருக்கிறது அல்லவா? சந்திரனை ரிஷபத்தில் போடுவதா அல்லது ம துனத்தில் போடுவதா? இப்போது சந்திரன் எந்தப்பாதத்தில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்போம். கண்டுபிடித்தால் நமக்குச் சந்திரனை எங்கு போடுவது என்பது விளங்கும்.

ஒரு நாளைக்கு மொதம் 60 நாழிகை எனக் கூறி இருந்தோம். சந்திரன் அன்று 23 நாழி கை 11 வினாழிகை ரோகிணியில் சஞ்சாரம் செய்து வ பிட்டார் இல்லையா? மீதிப் பொழுதை மிருகசீரிஷத்தில் அவர் சஞ்சாரம் செய்கிறார். ஆடி 30-ம் தேதிக்கு மொத்த நாழிகை 60.00 நாழிகை ரோகிணியில் சஞ்சாரம் செய்தது 23.11 நாழிகை சந்திரன் மிருகசீரிஷத்தில் 30-ம் தேதி மட்டும் சஞ்சாரம் செய்யவ பில்லை. 31-ம் தேதியும் 20 நாழிகை 45வினாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் இதுதெரிய வரும். மிருகசீரி ஷத்தில் மொத்தம் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார்? இரண்டையும் கூட்டுங்கள். 36.49 + 20.45 =57.34 நாழிகை.இந்த மொத்த நாழிகைக்குப் பெயர் ஆத்தியந்த பரம் நாழிகை எனப் பெயர். இப்போது ஆத்தியந்த பரமநாழிகை என்றால் என்ன? எனத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? சந்திரன் ஒரு நஷ்ஷத்திரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமே ஆத்தியந்த பரம் நாழிகை எனப் படும்.

நாம் எடுத்துக்கொண்ட நேரம் மாலை 5.00 மணி. அன்றைய சூரிய உதயத்தைக் கண்டு பிடுயுங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? பஞ்சாங்கத்தின் கீழ்ப் பகுதியைப் பாருங் கள். ஆடி 30-க்கு, அதாவது ஆகஸ்டு 14-ம் தேதிக்கு "சூரிய உதய காலை" என்ற கட்டத்தின் கீழ் போட்டுள்ளார்கள் பாருங்கள். காலை 6.02 எனப் போட்டுள்ளார்கள். காலை 6.02 முதல் மாலை 5.00மணி முடிய அதாவது 10 மணி 58 நிமிஷத்தை நாழிகை ஆக்குங்கள். 27-நாழிகை 25 வினாழிகை வரும். அதாவது குழந்தை பிறந்து சூரியோ தயத்திலிருந்து 27 நாழிகை 25 வ பினாழிகை ஆகிருக்கிறது. சூரியோதயத்திலிருந்து 23நாழிகை 13 வ னாழிகை முடிய ரோகிணி இருக்கிறது. மீதி (27.25-23.13= 04.12) நாழிகை மிருகசீரிஷத்தில் சென்று இருக்கிறது.

மிருகசீரிஷத்தின் ஆத்தியந்த பரமநாழிகை =57.34 அதாவது மிருகசீரிஷத்தின் 4- பாதங்களுக்கு =57.34 ஒரு பாதத்திற்கு =57.34 / 4 =14.24 நாழிகை சந்திரன் 14.24 நாழிகை வரையில் முதல் பாதத்தில் இருக்கிறார். நம்முடைய மானசீகக் குழந்தைக்கு மிருகசீரிஷத்தில் 4 நாழிகை 12 வ பினாழிகை சென்று இருக்கிறது. ஆகவே சந்திரன் முதல் பாதத்தில் தான் இருக்கிறார். ஆக சந்திரனை ரிஷபத்தில் போடுங்கள். என்ன 9 க பிரகங்களையும் போட்டு விட்டீர்களா? இப்போது திருகணித ரீதியாக ஜாதகத் தைப் போட்டோம். வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துப் போடுவோமா?

நாம் கையாண்ட திருகணிதப் பஞ்சாங்கம் காஞ்சீபுரத்தை வைத்துக் கண பிக்கப் படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் தஞ்சாவூரை வைத்துக் கணிக்கப் படுகிறது. அதில் சூரியோதயம் காலை 6.06 எனப் போட்டு இருக்க பிறார்கள். அதாவது தஞ்சாவூரில் சூரியோதயம் காலை 6.06. நாம் சிறார்கள். அதாவது தஞ்சாவூரில் சூரியோதயம் காலை 6.06. நாம் எடுத்துக் கொண்ட மானசீகக் குழந்தை சென்னையில் பிறந்தது எனக் கொள்வோம். திருகணிதத்தில் காஞ்சீபுரத்தில் சூரியோதயம் காலை 06.02 எனப் போட்டுள்ளதால் நாம் அந்த சூரியோதயத்தையே எடுத்துக் கொள்வோம். வாக்கி யப் பஞ்சாங்கத்தில் காலை 12நாழிகை 40 வினாழிகை வரை தான் மிருகசீரிஷம் எனப் போட்டு இருக்க பிறார்கள். அதற்குப்பின் திருவாதிரை நக்ஷக்ஷத்திரம் தான் வருகிறது. த பிருவாதரையில் எந்தப் பாதம் வருகிறது எனப் பாருங்கள். திருவாதரைய பின் ஆத்தியந்த பரம் நாழிகையைக் கண்டு பிடியுங்கள். பின்பு குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்து இருக்கிறது எனக் கண்டு பிடியுங்கள். த பிருவாதரை 2-ம் பாதத்தில் பிறந்து இருக்கிறது. சந்திரனை மிதுனத்தில் போடுங்கள். இரண்டு பஞ்சாங்கத்திலும் ஜாதகம் கணித்தபின் எப்படி இருக்கிறது எனப்பாருங்கள். 





வித்தியாசம் தெரிகிறது அல்லவா? நஷ்ஷத்திரமே மாறி இருக்கிறது அல்லவா? அதற்குத்தான் நாம் திருகணிதத்தையே எல்லோரும் கையாள வேண்டும் எனக் கூறி வருகிறோம். கிரகங்கள் பார்க்கின்றன என ஜோதிடத்தில் கூறுகிறார்கள் அல்லவா? பார்வை என்றால் என்ன? அதை இப்போது பார்ப்போம். எல்லாக் க பிரகங்களும் தான் இருக்கும் வீட்டில் இருந்து 7-ம் வீட்டைப் பார்க்கும். உதாரணமாக சந்திரன் ரிஷபத்தில் இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்ப்பார். ரிஷபத்திலிருந்து எண்ணுங்கள். ரிஷபம் 1,ம பிதுனம் 2, கடகம் 3,சிம்மம் 4, கன்னி 5, துலாம் 6, விருச்சிகம் 7. ஒருகிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டையும் சேர்த்து எண்ண வேண்டும். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டி லிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள்.ஆனால் குரு,சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு. செவ்வாய்:- அவர் தான் இருக்க்கும் இடத்திலிருந்து 4,7,8-ம் வ வீடுகளைப் பார்ப்பார். நம் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். அவர் 4-ம் பார்வையாக கும்பத்தையும், 7-ம் பார்வையாக ரிஷபத்தையும், 8ம் பார்வையாக மிதுனத்தையும் பார்ப்பார். அவர் ரிஷபத் தைப் பார்க்கும் போது அதில் உள்ள சந்திரன், சனி ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். அதே போல் மிதுனத்தைப் பார்க்கும் போது அதில் உள்ள குரு, ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். பார்வையினால் என்ன பலன் என்பதைப் பின்னால் பார்ப்போம். 

குரு:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 5-ம் வீடு, 7-ம் வீடு, 9-ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பார். குரு மேற்கண்ட ஜாதகத்தில் மிதுனத்த பில் இருக்கிறார். அவர் 5-ம் பார்வை யாக துலாத்தையும், 7-ம் பார்வையாக தனுசையும், 9-ம் பார்வையக கும்பத்தையும் பார்ப் பார். அந்த வீடுகளையல்லாது அந்த வீட்டில் உள்ள கிரகங்களையும் பார்ப்பார்.

சனி:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம் வீடான கடகத்தையும், 7-ம் வீடான விருச்சிகத்தையும் 10-ம் வீடான கும்பத்தையும் பார்ப்பார். அந்த வீட்டிலுள்ள கிரகங்களையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களுக்கெல்லாம் 7-ம் பார்வை ஒன்று தான். பார்வை என்பது இரண்டு கிரகங்களுக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கும், ஒரு வ ஊட்டிற்கும் உள்ள தூரம் தான். இந்த தூரத்தைத்தான் நாம் பார்வை என்க றோம். ஜாதகத்தில் நாம் ஒன்பது கிரகங்களைப் போட்டு விட்ட்டோம். இனி லக்கினமும், ஜனனகால இருப்பு தெசையையும் கணித்தோமேயானால் ஜாதகம் முழுமை ஆகிவிடும். இப்போது லக்கினம் என்றால் என்ன எனப் பார்ப்போம்?

சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத்தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்னம் எனப்படும். என்ன புரிகிறதுவும் போல் இருக்கிறது; அதே சமயம் புர பியாதது போலும் இருக்கிறது. இல்லையா. இன்னும் வ பிளக்கமாகச் சொல்லுகின்றோம். பூமியை மேலிருந்து கீழாகப் 12 பகுத பியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 12-பகுதிக்கும் மேஷத்திலிருந்து, மீனம் முடிய 12 ராசிகளின் பெயர்களைக் கொடுங்கள். அதாவது பூமியைப் 12 ராசிகளாகப் பிரித்து விட்ட்டோம்.

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்த பில் ரிஷபத்தில் உதயமாவர். 

இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார். சூரியன் சித்தரையில் மேஷத்தில் உதயமாவதால் அதற்கு மேஷமாதம் என்று பெயர். வைகாசியில் ரிஷபத்தில் உதயமாவதால் அதற்கு ரிஷப் மாதம், என்று பெயர். இவ்வாறே ம பிதுனமாதம், கடக மாதம், சிம்ம மாதம், கன்னியா மாதம், துலா மாதம், விருச்சிக மாதம், தனுர் மாதம், மகர மாதம், கும்ப மாதம், மீன மாதம் என்று ஒவ்வொரு மதமும் அழைக்கப்படும்.



ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெ றுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார். சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1,2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் இருக்கும்போது மிகுந்த பலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.அஸ்வனி முதல் ரேவதி முடிய உள்ள 27 நக்ஷக்ஷத்த பிரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அக்னிக்கும் பிறந்த பெண்களாம். தட்சன் இந்தப் பெண்களையெல்லாம் சந்த பிரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.சந்திரன் இந்த 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தி வந்தான். மற்ற 26 பேரையும் அவன் ந பினைக்கவே இல்லை. இதனால் விரக்தியுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். தட்சன் மிக வருந்த 1 மருமகன் சந்திரனிடம் "எல்லோரிடமும் சமமாக | அன்பாய் இருக்குமாறு" கூறினான். ஆனால் சந்திரனோ அவர் பேச்சைக் கேட்க்காமல் பழையபடி ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் கலைகள் நாளா வண்ணமும் குன்றட்டும் என சாபமிட்டார். சந்திரனின் ஒளி ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கியது. இதனால் வருத்தமுற்ற சந்திரன் சிவபெறுமானை நோக்கித் தவம் புரிந்தான். தனக்கு ம மீண்டும் பழைய ஒளி கிடைக்க வேண்டும் என வேண் டிக்கொண்டான். சிவனும் மனமிறங்கி "குன்றத்தொடங்கிய ஒளி மீண்டும் சிறிது சிறிதாக வளர" வரம் கொடுத்தார். அதனால் தான் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்து பின் 15 நாட்களில் வளர்கிறார். இது தான் தேய் பிறை, வளர் ப பிறை தோன்றிய புராணக்கதை. சரி! நாம் இனி வ விஞ்ஞானத்திற்கு வருவோம்.

சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். பெளர்ணம் பியன்று சூரியனின் ஒளி சந்திரன் மேல் பட்டு ப பிரகாசமாய்க் காட்சி அளிக்கிறார். முழு நிலவாய்க் காட்சி அளிக்கிறார். சந்திரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்ற பிக் கொள்ள 27 பூமியின் நாட்கள் ஆகின்றன. அதாவது சந்திரன் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்குள் பூமி 27 முறை சுற்றி விடுகிறது. சந்திரன் மெதுவாகச் சுற்றுவதால் தினமும் சிறிதுசிறிதாய்க் குறைகிறார். நமது கண்களுக்கு சிறிது, சிறிதாகக் குறைந்து காணப் படுகிறார். இதுதான் ப பிறைகள் தோன்றக் காரணம். அம்மாவாசையன்று சந்திரன் பாதிச் சுற்றுத்தான் சுற்றி இருப்பார். அப்போது அவர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மீதிச் சுற்றைச் சுற்ற ஆரம்பிக்கும் போது சிறிது, சிறிதாக வளர ஆரம்பிக்க பிறார். அதைத் தான் நாம் வளர் பிறை என்கிறோம். ஒரு சுற்று முடிந்தவுடன் அவர் முழுநிலவாய்க் காட்சி அளிக்க பிறார். அதைத்தான் நாம் பெளர்ணமி என்கிறோம். நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். மறு பக்கக்கைப் பார்க்கவே முடியாதா? மறு பக்கத்தைப் பார்க்கவே முடியாதா? முடியும். அம்மாவாசையன்று அது மறு பக்கத்தைக் காட்டுகிறது. நமக்குத்தான் அது இருட்டாக இருப்பதால் மறுபக்கம் தெரிவதில்லை. நாம் எப்போதும் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். சரி! இனிமேல் நாம் பாடத்திற்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஆச்சார பியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேத பிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.



ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

12 - மிதுனம் சுக்கிரன் 
13 - கடகம் புதன் 
28 - சிம்மம் புதன்

அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரி ஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்ச பிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.

கிரகங்களுக்குச் சொந்த வீடு இருந்து என்ன பயன்

சென்ற பாடத்தில் கிரகங்களின் சொந்த வீடுகளைத் தெர பிந்து கொண்டீர்கள். சரி! கிரகங்களுக்குச் சொந்த வீடு இருந்து என்ன பயன் ? அது ஜோதிடத்திற்கு எந்த வ பிதத்தில் உதவுகிறது ? இப்போது அதைத் தெரிந்து கொள்வோம். ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்கள் பில் நல்லதையே செய்யும். உதாரணத்திற்குக் கீழே உள்ள ராசிக் கட்டத்தைப் பாருங்கள்.



இதில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். கடகம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு பலம் அதிகரிக்கிறது. ஆகவே அவர் தன் தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்வார். சந்திர தசையோ, அல்லது சந்திர புக்தியோ அவருக்கு நல்லதையே செய்யும். அதே போன்று மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் அவர் நல்லதையே செய்வார். கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி நாம் கீழே எழுதி இருக்கிறோம். சொந்த, உச்ச,மூலத் திர கோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே செய்யும் என்பது ஜோதிட விதி. நீச்ச வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதைச் செய்யாது என்பதுவும் ஜோதிட விதி. இதைத் தவிர சந்திரன் மனது, தாயார்ஆகியவைகளுக்கு காரகம் வகிப்பவர். சந்திரனை வைத்துத்தான் நாம் ஒருவரின் மனநிலையையோ, அல்லது தாயாரையோ கூற வேண்டும். மேற் கண்ட உதாரண ஜாதகத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் நல்ல மனநிலையுடன் இருப்பார் எனக்கொள்ளலாம். தாயாரும் நல்ல விதமாக இருப்பார் எனக்கொள்ளலாம். சந்திரனுடன் ராகு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அந்த ஜாதகர்மிகுந்த சுயநல வாத பியாக இருப்பார். சனி இருந்தால் அவர் எதையும் மறைக்கக் கூடியவறாக இருப்பார். வெளிப் படையாக எதையும் கூற மாட்டார். (HE WILL BE A SECRETIVE PERSON). கீழே உச்ச, நீச்ச, மூலத்திர பிகோண வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.



ஒரு கிரகம் எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெ றுகிறார். உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார். சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ரிஷபத்தில் கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4- பாதங்கள், மிருகசீரிஷம் 1,2, பாதங்கள் இருக்கின்றன. சந்திரன் ரோகிணியில் இருக்கும்போது மிகுந்த பலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.அஸ்வனி முதல் ரேவதி முடிய உள்ள 27 நக்ஷக்ஷத்த பிரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அக்னிக்கும் பிறந்த பெண்களாம். தட்சன் இந்தப் பெண்களையெல்லாம் சந்த பிரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.சந்திரன் இந்த 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தி வந்தான். மற்ற 26 பேரையும் அவன் ந பினைக்கவே இல்லை. இதனால் விரக்தியுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட்டனர். தட்சன் மிக வருந்த 1 மருமகன் சந்திரனிடம் "எல்லோரிடமும் சமமாக | அன்பாய் இருக்குமாறு" கூறினான். ஆனால் சந்திரனோ அவர் பேச்சைக் கேட்க்காமல் பழையபடி ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் கலைகள் நாளா வண்ணமும் குன்றட்டும் என சாபமிட்டார். சந்திரனின் ஒளி ஒவ்வொரு நாளும் குறையத் தொடங்கியது. இதனால் வருத்தமுற்ற சந்திரன் சிவபெறுமானை நோக்கித் தவம் புரிந்தான். தனக்கு ம மீண்டும் பழைய ஒளி கிடைக்க வேண்டும் என வேண் டிக்கொண்டான். சிவனும் மனமிறங்கி "குன்றத்தொடங்கிய ஒளி மீண்டும் சிறிது சிறிதாக வளர" வரம் கொடுத்தார். அதனால் தான் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்து பின் 15 நாட்களில் வளர்கிறார். இது தான் தேய் பிறை, வளர் ப பிறை தோன்றிய புராணக்கதை. சரி! நாம் இனி வ விஞ்ஞானத்திற்கு வருவோம்.

சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். பெளர்ணம் பியன்று சூரியனின் ஒளி சந்திரன் மேல் பட்டு ப பிரகாசமாய்க் காட்சி அளிக்கிறார். முழு நிலவாய்க் காட்சி அளிக்கிறார். சந்திரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்ற பிக் கொள்ள 27 பூமியின் நாட்கள் ஆகின்றன. அதாவது சந்திரன் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்குள் பூமி 27 முறை சுற்றி விடுகிறது. சந்திரன் மெதுவாகச் சுற்றுவதால் தினமும் சிறிதுசிறிதாய்க் குறைகிறார். நமது கண்களுக்கு சிறிது, சிறிதாகக் குறைந்து காணப் படுகிறார். இதுதான் ப பிறைகள் தோன்றக் காரணம். அம்மாவாசையன்று சந்திரன் பாதிச் சுற்றுத்தான் சுற்றி இருப்பார். அப்போது அவர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மீதிச் சுற்றைச் சுற்ற ஆரம்பிக்கும் போது சிறிது, சிறிதாக வளர ஆரம்பிக்க பிறார். அதைத் தான் நாம் வளர் பிறை என்கிறோம். ஒரு சுற்று முடிந்தவுடன் அவர் முழுநிலவாய்க் காட்சி அளிக்க பிறார். அதைத்தான் நாம் பெளர்ணமி என்கிறோம். நாம் எப்போதும் நிலவின் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். மறு பக்கக்கைப் பார்க்கவே முடியாதா? மறு பக்கத்தைப் பார்க்கவே முடியாதா? முடியும். அம்மாவாசையன்று அது மறு பக்கத்தைக் காட்டுகிறது. நமக்குத்தான் அது இருட்டாக இருப்பதால் மறுபக்கம் தெரிவதில்லை. நாம் எப்போதும் ஒரு பக்கத்தையே பார்க்கிறோம். சரி! இனிமேல் நாம் பாடத்திற்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஆச்சார பியாள் மடத்துப்பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 1-ம் தேதிக்குப் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது எனக் கற்றுக் கொடுத்தோம். ஆடி 30-ம் தேத பிக்கு எப்படி ஜாதகம் கணிப்பது எனப் பார்ப்போம். பஞ்சாங்கத்தில் ஆடி மாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே ஜாதகக்கட்டம் போட்டிருக்கிறார்கள். பாருங்கள். அது ஆடி 1-ம் தேதியின் கிரகநிலை. அன்று ஒரு குழந்தை பிறந்தால் அது தான் அன்றைய கிரக நிலை. அதாவது கீழே காட்டியுள்ள படி அன்றைய கிரக நிலை இருக்கிறது.



ஆனால் நாம் எடுத்துக் கொண்டது ஆடி-30-ம் தேதி. இந்த 30-நாட்களில் கிரகங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் அல்லவா? நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கட்டத்தின் நடுவில் 'பெயர்ச்சி' எனப் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.

12 - மிதுனம் சுக்கிரன் 
13 - கடகம் புதன் 
28 - சிம்மம் புதன்

அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரி ஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்ச பிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.

Monday, 17 June 2019

திருக்குடவாயில் கோணேஸ்வரர் ஆலயம்.


சிவாயநம
நமசிவாய

திருவாரூர் மாவட்டம்  கும்பகோணத்தில் இருந்து  திருவாரூர் செல்லும் வழியில்  20 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 94 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 157 வது தலமாக விளங்கும்

பிரளயகாலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா, ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப்  சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது.  பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான்.

கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பியதாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்

63 நாயன்மார்களில் ஒருவராக உள்ள காச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றான இவ்வாலயத்தில்

அருணகிரிநாதர், சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருக்குடவாயில் (குடவாசல்)
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தவாறு  அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் பெரியநாயகி
அம்பாள் உடனுறை அருள்மிகு கோணேஸ்வரர்
சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.

Sunday, 16 June 2019

திருநீற்றின் உயா்நலம்

🔥 *சிவமயம் சிவாயநம*🔥

    *திருச்சிற்றம்பலம்*

🔘 சிவபக்தியில் சிறந்த வரகுணதேவாிடம் ஒரு நாள் காவலா்கள் திருடனைக் கையும் களவுமாகப் பிடித்து வந்து நிறுத்தினாா்கள் . திருடன் தன்னுடைய நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான். இதனைக் கண்ட அரசரான வரகுண தேவா் திருடனைத் தண்டிக்காமல் விட்டுவிட்டாா்.

காரணம் , திருடனுடைய நெற்றியில் *திருநீற்றைக் கண்ட மாத்திரத்தில் எனக்குச் சிவபெருமானாருடைய நினைவு வந்தது . சிவநினைவை ஊட்டியவரைத் தண்டிக்க மாட்டேன் என்றாா். திருடனுடைய அரசு தண்டனையை விலக்கியது திருநீறு.*

*" வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையில் கட்டவிழ்ப் பித்தும் "* _ திருவிடை மருதூா் மும்மணிக்கோவை.

🔘 சேரமான் பெருமாள் நாயனாா் மகுடாபிசேகம் முடிந்து யானை மீது நகா்வலம் வந்து கொண்டிருந்தாா். உவா்மண் மூட்டையைச் சுமந்தபடி ஒரு சலவைத் தொழிலாளி  எதிாில் வந்தான். உவா்மண் சலவைத் தொழிலாளியின் உடம்பின் மீது படிந்து வியா்வையில் நனைந்து , பின்னா் உலா்ந்து வெளுத்திருந்தது.

யானை மீது உலா வந்து கொண்டிருந்த சேரமான் பெருமாள் உடம்பெல்லாம் வெளுத்திருந்ததைக் கண்டு , *திருநீறு பூசப்பட்டுள்ளது என்று எண்ணி சிவபெருமானாரை நினைந்தாா். யானையை விட்டு இறங்கிச் சென்று சலவைத் தொழிலாளியை வணங்கினாா்.* இந்த வரலாற்றை பொியபுராணத்தால் அறிகிறோம்.

*அரசனையும் அடிபணிய வைத்தது திருவெண்ணீறு என்பதை நாம் உணர வேண்டும்.*

🔘 எழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசு சுவாமிகள் சைவத்திலிருந்து சமண சமயம் சாா்ந்தாா். சிவபெருமானாருடைய கருணையால் சூலை நோய் கொடுக்கப் பெற்றாா். மீண்டும் சைவ சமயம் சாா்தலே புண்ணியம் எனக் கருதித் தம்முடைய தமக்கையாா் திலகவதியாா் நாளும் சிவத்தொண்டாற்றி வரும் திருவாதிகை வீரட்டானம் வந்தடைந்தாா்.

நமது தமக்கையாரைப் ( திலகவதியாரை ) பணிந்து நின்றாா். திலகவதியாரும் *திருநீற்றை* அளித்தாா். திருநீறு அணிந்து கொண்டு வீராட்டானேசுவரைப் பாடிப்படிந்து சூலை நோய் நீங்கப் பெற்றாா் என்பதனைப் பொியபுராணம் கூறுகிறது. *திருநீறு திருநாவுக்கரசு சுவாமிகளைப் புனிதராக்கியது எனலாம்.*

🔘 திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தா் மங்கைமயா்கரசியாாின்  ( பட்டத்து அரசி ) வேண்டுதலை ஏற்று மதுரை வந்திருந்தாா். அச்சமயம் ஞானசம்பந்தா் தங்கிருந்த திருமடத்திற்குச் சமணா்கள் *தீ* வைத்தாா்கள். சம்பந்தா் சுவாமிகள் ஆணைப்படி அக்கினித் தேவன் ( மடத்திற்கு வைத்த தீ ) கூன்பாண்டியனை ( அரசன் ) பற்றியது.

தனது நோயைப் போக்குபவாின் ( வெப்புநோய் ) சமயத்தைச் சோ்வேன் என உறுதி கூறியிருந்தான் சமணம் சாா்ந்திருந்த கூன்பாண்டிய மன்னன். சமணா்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்து பாா்த்தாா்கள். *அரசனுடைய நோய் குணமாக வில்லை.*

திருஞானசம்பந்தா் *" மந்திரமாவது நீறு "*  என்னும் பதிகத்தை ஓதியவாறு , கூன்பாண்டியனுடைய *உடம்பில் திருவெண்ணீற்றைப் பூசினாா். அரசனுடைய நோயும் நீங்கியது. அவனும் சைவ சமயம் சாா்ந்தான்.*

பதிவு : 1

🔥 *சிவவிஜயகுமாா்.* 1024