அ
சிவாயநம
நமசிவாய
தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருச்சேறையில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் வடக்கே 4 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,
காவிரி தென்கரை தலங்களில் 96 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 159 வது தலமாக விளங்கும்
சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.
பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகின்ற
தலமாக திகழும்
மூவரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்
திருநாலூர் மயானம்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் ஞானாம்பிகை (பெரியநாயகி)
அம்பாள் உடனுறை அருள்மிகு ஞானபரமேஸ்வரர் (பலாசவனநாதர்)
சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.
திருச்சிற்றம்பலம்.