Pages

வேல்மாறல் மகா மந்திரம்

Thursday, 22 June 2017

(வேலும் மயிலும் சேவலும் துணை என ஆறு முறை கூறி, கீழ்க்காணும் மந்திரத்தைப் படிக்கவும்) 

திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே. 

1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.  
2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. 
3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்... 
4.  தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்... 
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கஜக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்... 
6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்... 
7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்... 
8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்... 
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்... 
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்... 
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்... 
12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில் 
13.  பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். - திருத்தணியில்... 
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்... 
15. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்... 
16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்... 
17. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்... 
18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்... 
19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும் - திருத்தணியில்... 
20.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்... 
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...
22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில் 
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குஹையை இடித்துவழி காணும் - திருத்தணியில்...
24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் - திருத்தணியில்...
25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் - திருத்தணியில்...
26.  தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் - திருத்தணியில்...
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்...
28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...
29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...
30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...
31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...
32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. - திருத்தணியில்...
33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். - திருத்தணியில்...
35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. - திருத்தணியில்...
36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...
37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...
38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...
39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...
40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்..
41.  தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில் 
42.  சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்..
43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..
45.  சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...
46. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..
47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..
48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். - திருத்தணியில்..
49.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..
50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். - திருத்தணியில்..
51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...
52. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..
55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில் 
56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...
57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்..
58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...
59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்..
60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்..
61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. - திருத்தணியில்...
62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்..
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். - திருத்தணியில்..

(வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை ஜபிக்கவும்)

சேயவன் புந்தி வனவாஸ மாதுடன் சேர்ந்த செந்தில்
சேயவன் (பு) உந்(து) இகல் நிசாச ராந்தக! சேந்த! என்னில்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதரும் சேதம் இன்றே.

(வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை ஜபிக்கவும்)
சலம் காணும் வேந்தர் தமக்கம் அஞ்சார்யமன் சண்டைக்(கு) அஞ்சார்
துலங்கா நரகக் குழி அணுகார் துஷ்ட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவி தான் கற்(று) அறிந்தவரே.

(வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை ஜபிக்கவும்)

நூற்பயன் வேல் வகுப்பைத் தந்தார் வியன்சீர் அருணகிரி
நூல்வகுப்பை மேல் தொகுத்தோர் நூலாக்கிச் - சூல்வகுப்பைச்
சாடும் வேல் மாறல் தந்தார் ஸச்சிதாநந்தகுரு
பாடும் வேல் மாறல் இதைப் பார். -

ஓஃம்

திருஉத்திரகோசமங்கை திருக்கோவில்

"மரகத நடராஜர்" மரகதக் கல் கிடைத்ததற்கான புராண நிகழ்வு
___________________________________

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் "மரைக்காயர்" என்ற மீனவர், வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்துவந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி இருந்தார்.

ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்து சென்று விட்டது. அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது.

ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக இருந்துள்ளது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றேன்று நின்று விட்டது. மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும், மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியலை.

மங்களேஸ்வரரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டுப் பலநாள் கடலில் திரிஞ்சலைந்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது.

படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்த கல் மீது வீட்டுக்குள் போக வர்ற ஆட்கள் நடந்து நடந்து, மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னியது.

மங்களேஸ்வரர் மரைக்காயரின் வறுமையான காலக் கட்டத்தில் இருந்து விடுபட அளித்த பரிசு என்பதை உணர்ந்து, மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தால் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார்.

நடந்த அனைத்தையும் விவரித்து, தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்...

சோதித்தவர் ஆச்சரியத்துடன் "இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது" என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார்.

இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் இரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது.

அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை அனுப்பினார்.  சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் மயங்கியே விழுந்துவிட்டார், "என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா" என்று கூறிவிட்டு இலங்கைக்கு சென்றார்.

மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார் ,

அப்போது...

"நான் மரகத நடராஜர் வடித்து தருகிறேன் மன்னா" என்ற குரல் வந்தது ,

குரல் வந்த திசை நோக்கி மன்னர் மற்றும் பிரஜைகள் அனைவரும் திரும்பியதும் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர். அவர் வேறு யாரும் இல்லை...

"சித்தர் சண்முக வடிவேலர்" தான்

மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு (பால் அபிஷேகத்தின் போது காணலாம்) வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

பின்னர் மன்னரை அழைத்து முதலில் மூர்த்தியே (மரகத நடராஜரை) நிறுவி பின்னர் ஆலயம் அமைக்கும் படி அறிவுறை கூறினார். இதனால் மன்னர்கள், முகலாயர்கள், அன்னியர்கள் என பல படையைடுப்புகளை தாண்டி, இன்று மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திருநடனம் புரிகிறார்...

தகவல்: எம்.பி. தங்கவேலு சுவாமிகள் எம் ஏ (இவர் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர். திருஉத்திரகோச மங்கையில் பிறந்து வளர்ந்தவர்)

உத்திரகோசமங்கை ஆடல் அரசே ! போற்றி போற்றி...

பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர் களுக்காக இந்தக் கதை

Wednesday, 21 June 2017


ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.
அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது.
ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.
அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.
“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான்.
அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.
தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.
“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.
அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்…. “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?
நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே?
நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்..?”
“ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…” எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்… “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம்வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.
அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.
அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது… எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.
ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.
இந்த கதை கூறும் நீதி.
அந்த மன்னன் தான் நாம்.
நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.
அந்த விறகுவெட்டி தான் இறைவன்.
இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று. இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.
பரிகாரம் என்பது ஒரு உபாயம் அவ்வளவே. அதுவே இறுதியானது அல்ல.
நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை.
ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம். நாம் செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) பிராயச்சித்தமாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்தகால / முன்ஜென்ம தவறுக்கு வருந்தி – கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் – ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.
மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்… உடனடி பலன் நிச்சயம்!

from FB

 

Most Reading

Total Pageviews