Pages

Tuesday, 11 June 2019

சிவபுரம் சிவகுருநாதர் ஆலயம்.


சிவாயநம
நமசிவாய

சிவபுரம்  சிவகுருநாதர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நெடுஞ்சாலை வழியே  தென்கிழக்கு  அருகே 5 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரை தலங்களில் 67 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 130 வது தலமாகவும் விளங்கும்

இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று "சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது.  இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார்.

ஒருமுறை கைலாயத்திற்கு ராவணன் தூய்மையற்றவனாக வந்தான். அவனை நந்தி தேவர் தடுத்து நிறுத்தினார். தன் சகோதரனான ராவணனை கைலாயத்திற்குள் அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமுற்ற நந்தி, குபேரனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதனால் பதவியிழந்த குபேரன், தனபதி என்னும் பெயருடன் மன்னனாக பூமியில் வாழ்ந்தான். சிவபக்தனான தனபதிக்கு சிவனுக்கு பரிகார பூஜை செய்து இழந்த பதவியைத் திரும்பப் பெற்றான். குபேரன் பூஜித்த லிங்கம் சிவகுருநாதர் என்னும் திருநாமம் பெற்றது.

குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம்.  சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலமாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்


திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்


திருச்சிவபுரம்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் ஆர்யாம்பாள் (சிங்காரவல்லி)
அம்பாள் உடனுறை அருள்மிகு சிவகுருநாதசுவாமி
(சிவபுரீஸ்வரர்) சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

திருச்சிற்றம்பலம்.