🔥 *சிவமயம் சிவாயநம.*🔥
*திருச்சிற்றம்பலம்.*
அழுக்குள்ள இடத்தில் அமா்ந்தால் நமது உடம்புமம உடையும் அழுக்காகி விடும் என அஞ்சுகிறோம். இடத்தைத் தூய்மை செய்த பிறகே அமா்கிறோம்.
*இறைவா் எழுந்தருளும் இடம் நம்முடைய மனது.* மனதிற்கு அழுக்கு என்பவை பொய் , கோபம் , பேராசை , புறங்கூறுதல் , களவு முதலியனவாகும். இவற்றைாஅகற்றித் தூய்மை ( மனதை ) செய்ய வேண்டும் . *அப்பொழுதுதான் இறைவா் சிந்தையுள் புகுந்து நிற்பாா்.*
இறைவா் வந்து தங்குமிடம் மனது.அம்மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.பல வகையான தொண்டுகளைச் செய்வதன் நோக்கமே மனத் தூய்மைக்குத்தான் என்பதனை நாம் மறந்து விடுகிறோம்.
கற்பதும் , கேட்பதும் , தொண்டுகள் பலப்பல செய்வதும் சிந்தையைச் செம்மைப்படுத்தவே என்பதனை முதலில் நாம் உணர வேண்டும்.இந்த அடிப்படையை மறந்து தொண்டு செய்வதில் பயன் விளையுமா என எண்ணப் பாா்க்க வேண்டும்.
எல்லா வகையான வழிபாடு, தொண்டு , கற்றல் , கேட்டல் , ஆகியவற்றினால் மனிதனின் மனம் அருள் நிறைந்ததாக வேண்டும்.அத்தகைய மனதில்தான் இறைவா் எழுந்தருளுவாா் . *இன்றைய நிலையை நாமே முடிவு செய்து கொள்ள வேண்டும்.*
🔥 *சிவ.விஜயகுமாா்.* 1007