Pages

Thursday, 31 January 2019

மஹோதயம்

*வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று* எல்லா பஞ்சாங்கத்திலும் *"மஹோதயம்"* என்று குறிப்பிட்டுள்ளது.

*"மஹோதயம் என்றால் என்ன?"* என்பதன் ஒரு சிறிய விளக்கம்.

*அர்த்தோதய/மஹோதய புண்யகாலங்கள்* பொதுவாக அறுபது (60) வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும்.

உதயம் என்றால் காலையில் சூரியனின் உதயம் என (தெரிந்ததே). அன்று மஹத்தான உதயம் என்கிறது சாஸ்திரம்.

*மாகமாசத்தில் வரும் (குரு அஸ்தமன காலத்தில்,) #திங்கள்கிழமையும்,(ஞாயிறானால் அர்த்தோதயம்) #ச்ரவணநக்ஷத்ரமும், #வ்யதீபாதயோகமும் சதுஷ்பாத கரணமும்* சேர்ந்த நாளில் ஏற்படுவதாகும்.

இந்நாள் *#அலப்யம்*—கிடைத்தற்கரியது எனப்படும்.

இதுவே *சூர்யோதய காலத்தில் வ்யதீபாத யோகத்தின் நாலாவது பாதமும், அமாவாசையின் முதல்பாகமும், ச்ரவணத்தின் நடுப்பாகமும் ஒரு சேரக் கிடைப்பது அதிவிசேஷமாம்.*

அன்று *சூர்யோதயத்திற்கு முன்பாக* சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்ஷமாக கிணற்றிலோ
சுத்தராய் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்து, வேதவித்துக்களுக்கு தானம் கொடுத்தல், மந்த்ர ஜபம், தேவதா பூஜைகள், காம்ய ஹோமங்கள்,
பித்ரு பூஜனமாக அத்தேவதை களுக்கு ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்ற கர்மங்கள் செய்வது அனந்தமான பலனைத் தரும்,  என்றும்

அந்த நாள் *கோடி சூர்ய க்ரஹணத்திற்கு சமானம்* என்றும் ரிஷிகள் கூறியுள்ளார்கள்.

ஆதாரம்:  *ஸ்ம்ருதி முக்தாபலம்* என்ற *வைத்யநாத தீக்ஷிதீயத்தில்* (ஸ்ரீ மடம் வெளியிட்டுள்ள .……புதிய பதிப்பு) *ஸ்ராத்த காண்டம்* பக்கம் 220.

*ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து*