Pages

Monday, 27 March 2017

முருகா

திருச்செந்தூர் வாரீர்...

அண்ட உலகம் சுழல
எண் திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே...

திருமுருக பெருமானின் மகா வேல் விருத்தம்,மயில் விருத்தத்திற்கு வாரீர்...வாரீர்.

11 வது மாத வேல் விருத்தம்,மயில் விருத்தம் வழக்கம் போல 27 அடியார்களின் ஓதலில்  மிகச் சிறப்பாக கடந்த வாரம் நிறைவு அடைந்தது.

12 வது மாத நிறைவு பூஜை யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் திருச்செந்தூர் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலை அரங்கத்தில் 17.04.2017 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதுவரை 27 அடியார்கள் பங்கேற்று 108 முறை ஓதிய இவ்வைபவத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட அடியார் பெருமக்கள் கலந்து பல நூறு முறை ஓத இருக்கிறார்கள்.

உலகமே நடு நடுங்கி எண் திசைகளும் சுழல திருமுருக பெருமான் அணிந்திருந்த அங்கியும் சுழல என திருமுருக பெருமானின் வீர பராக்கிரமங்களை சித்தர் பெருமான் அருணகிரி நாதர் உரைப்பதே வேல் விருத்தம்,மயில் விருத்தம்.

சிவ பெருமானின் அடியார் பெருமக்கள், முருக பெருமானின் அடியார் பெருமக்கள் அனைவரும் மகா வேல் விருத்த,மயில் விருத்த பெரு விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமுருக பெருமானை புகழ் பாட உள்ளன்போடு அழைக்கிறேன்.

தமிழ் தெரிந்த அனைவரும் பங்கேற்கலாம்.

மதிய உணவு ஏற்பாடு உண்டு.

நிகழ்ச்சி தொடர்புக்கு...
Ramasamy Tvm - 9578487740
Madhu Sudhanan - 9962758909
Thiruvenkataraj Manoharan - 9944679166
Guru Krishna - 7708790077
Subbian K - 9443872567
Sakthivel Sakthi Sakthivel - 9092721514
Rathi Adityan - 9443169006
Geetha Adityan - 9445166991
Balasubramania Adityan -9443069003

அனைவரும் அறிய பகிருங்கள்.